விறுவிறுப்புடன் தொடங்கிய ஏலியன் & பழங்குடியினர் டாஸ்க்.. ஷிவினை அழ வைத்த தனம் – பிக்பாஸ் ப்ரோமோ!

0
விறுவிறுப்புடன் தொடங்கிய ஏலியன் & பழங்குடியினர் டாஸ்க்.. ஷிவினை அழ வைத்த தனம் - பிக்பாஸ் ப்ரோமோ!
விறுவிறுப்புடன் தொடங்கிய ஏலியன் & பழங்குடியினர் டாஸ்க்.. ஷிவினை அழ வைத்த தனம் - பிக்பாஸ் ப்ரோமோ!
விறுவிறுப்புடன் தொடங்கிய ஏலியன் & பழங்குடியினர் டாஸ்க்.. ஷிவினை அழ வைத்த தனம் – பிக்பாஸ் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் 52 நாளான இன்று, ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் தனம் ஷிவின் அம்மா பற்றி பேச அதை கேட்டு ஷிவின் கோவப்பட்டு தனத்திடம் சண்டை போடுகிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஏழு வாரங்கள் முடிவடைந்துள்ளது. எட்டாவது வாரத்தின் தலைவராக அசிம் இருக்கிறார். மேலும் சென்ற வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். மேலும் இந்த வாரம் குயின்சி, கதிரவன், மைனா, ஜனனி, ரட்சிதா, தனலட்சுமி, ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்த வாரம் வெளியேற போவது யார் என இந்த வார இறுதியில் தெரிய வரும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்காக ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் இருக்கிறது. அதில் போட்டியாளர்களின் சிலர் ஏலியன் போலவும், சிலர் பழங்குடியினர் போலவும் மாறி இருக்கின்றனர். ஏலியன் டீம் பழங்குடியினர் டீம்மை எதாவது உணர்ச்சியை வெளிப்படுத்த செய்ய வேண்டும். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில், தனலட்சுமி ஏலியன் டீமில் இருக்கிறார். அவரை பழங்குடியினர் டீம் தூக்கிக் கொண்டு வருகின்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற பணத்தை கொடுக்கும் கதிர்.. முல்லைக்கு மீண்டும் டிரீட்மென்ட் தொடங்க நினைக்கும் தனம் – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

அப்போது அவர் ஷிவின் உணர்ச்சியை வெளிப்படுத்த சொல்ல, உடனே அம்மா பற்றி பேசுகிறார். உணர்ச்சிவசப்பட்ட ஷிவின் என் அம்மாவை பற்றி ஏன் பேசினாய் என கேட்க, உடனே தனலட்சுமி இது வெறும் டாஸ்க் தான என சொல்கிறார். எனக்கு என் அம்மா எவ்வளவு முக்கியம் என தெரிந்தும் நீ இப்படி பேசுவது சரி இல்லை என ஷிவின் சொல்லிவிட்டு பாத்ரூமில் வந்து கண்ணீர் வடிக்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!