டாஸ்கில் அசிம் செய்த காரியம்.. முகம் சுளித்த ஹவுஸ்மெட்ஸ் – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் எட்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் அசிம் செய்த வேலையால் மணி கோபப்படுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 54 நாட்கள் ஆகிவிட்டது. முதல் வாரம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் எலிமினேட் செய்யப்பட்டு 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அதில் இந்த வார தலைவராக அசிம் இருக்கிறார். மேலும் இந்த வாரம் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் நடைபெறுகிறது. வழக்கமாக டாஸ்கில் அசிம் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி விளையாடி சர்ச்சைகளில் சிக்குவார்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் அவர் நேற்று உடம்பு சரியில்லாமல் மயங்கி விழுந்துவிட்டார். அப்போது அவரை மெடிக்கல் ரூமிற்கு அழைத்து சென்று டிரீட்மென்ட் கொடுத்தனர். போட்டியாளர்கள் டாஸ்க் என நினைக்காமல் அசிம் உடம்பு சரியில்லை என்பதால் அவரை ரூமிற்குள் படுக்க வைத்தனர். ஆனால் அதை சாதகமாக பயன்படுத்திய அசிம் பூக்களை எல்லாம் எடுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் மணி பூக்களை எடுத்தது யார் என கேட்க அசிம் நான் தான் எடுத்தேன் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
உனக்கு உடம்பு சரி இல்லை என்பதால் தான் வீட்டிற்குள் படுக்க வைத்தோம் நீ இப்படி செய்வாய் என நான் நினைக்கவே இல்லை என மணி சொல்ல, அசிம் நக்கலாக சிரிக்கிறார். ஏற்கனவே அசிமிற்கு வீட்டிற்குள் பயங்கர பிரச்சனை இதில் இதை வேறு செய்துவிட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் அசிம் மீது பயங்கர கோவத்தில் இருக்கின்றனர்.