விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன அபிஷேக் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பிக்பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன அபிஷேக் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பிக்பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன அபிஷேக் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன அபிஷேக் – ரசிகர்கள் ஷாக்!

மக்களின் மனம் கவர்ந்த முக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ சீசன் 5 அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வரும் சூழலில் இன்றைய எபிசோடில் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் எலிமினேஷன்

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் துவங்கப்பட்ட ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 4வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே நிகழ்ச்சி ஆரம்பித்து 3 வாரங்களே கடந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள், பிரச்சனைகள், குழப்பங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக சில பிக்பாஸ் போட்டியாளர்கள் வேண்டும் என்றே சில விஷயங்களை தொடர்ந்து செய்வது போலவும், தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்வது போலவும் காணப்படுகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 – டிஜிபி அறிவுறுத்தல்!

அதனால் மற்ற சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் விமர்சனங்கள் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிக்கு அவ்வளவாக கிடைக்கவில்லை என்பது உண்மை. என்றாலும் இந்த நிகழ்ச்சி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர இருக்கிறது. அதாவது ‘பிக்பாஸ்’ சீசன் 5ன் இன்றைய எபிசோடில் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தில் நாடியா சங் என்பவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.10,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

இவரை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் கன்டென்ட் கிரியேட்டர் என்று அழைக்கப்படும் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இந்த வார நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படும் அபிஷேக் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்த வெளியேற்றம் காரணமாக இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here