Vijay TV Big Boss Promo || மீண்டும் முட்டி கொள்ளும் பிரியங்கா & நிரூப் – சண்டைக்களமான பிக் பாஸ் வீடு!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில், தனது கட்சிக்கான பாடலை பாடும் ப்ரியங்காவை பார்த்து நிரூப் கலாய்க்க, ப்ரியங்காவின் சில நடவடிக்கையால் சிபி எரிச்சலடைவதை போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ
தற்போது உற்சாகமும் குதுகலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் அரசியல் கட்சியின் பிரமுகர்களாக மாறியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு நகைச்சுவையான டாஸ்குகலேயே எதிரும் புதிருமாக இருந்து வரும் போட்டியாளர்கள், அரசியல்வாதிகளாக மாறினால் எப்படி இருக்கும் என்பது பார்வையாளர்கள் மத்தியில் சற்று ஸ்வாரசியத்தை கூட்டி இருக்கிறது. என்றாலும் இந்த டாஸ்க் மூலம் கடந்த சில எபிசோடுகளில் புதிய பிரச்சனைகள் எதுவும் உருவாகவில்லை.
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!!
இப்படி இருக்க இன்றைய நாளில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய எபிசோடு தொடர்புடைய ப்ரோமோ ஒன்று மோதல்களுடன் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஒரே கட்சியில் இடம்பெற்றுள்ள ப்ரியங்கா, பாவனி, அமீர், அபிநய் ஆகிய நால்வரும், அவர்கள் கட்சியின் சார்பில், ‘கற்க கற்க ஒழுக்கம் கற்க என்று சொல்க உரக்க’ என ஒரு பாடலை பாடுகிறார்கள். இப்போது, அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கையில் இதை கேட்கும் நிரூப், இந்த பாட்டை தவிர வேறு எதுவும் இவர்களுக்கு தெரியாது என கிண்டலடிக்க, முதுகில் குத்துவதை தவிர வேறு என்ன தெரியும் என்றும் கேட்கலாம் என ப்ரியங்கா கூறுகிறார்.
Jio நிறுவனத்தின் Disney+ Hotstar மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்கள் திருத்தம் – முழு விவரம் இதோ!
தொடர்ந்து எல்லாருக்கும் சாப்பாடு, ஊறுகாய் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு சாப்பிடுங்கள் என ப்ரியங்கா சொல்கையில் சாப்பிடும் போது இப்படியெல்லாம் பேசக்கூடாது, அது எதிரியாக இருந்தாலும் சாப்பிடும் போது இப்படி பேசக்கூடாது என சிபி எரிச்சலடைவதை போல சில காட்சிகள் இந்த ப்ரோமோவில் இடம்பிடித்துள்ளது. இந்த ப்ரோமோ காட்சிகளை பார்க்கும் போது ‘பிக்பாஸ்’ வீட்டில் அடுத்த மோதல் ப்ரியங்கா மற்றும் சிபிக்கு இடையே உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்