விஜய் டிவி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ அனிதா சம்பத் எடுத்த சூப்பர் முடிவு – ரசிகர்கள் பாராட்டு!
‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் பெர்ஃபாமென்ஸ் கொடுத்தது மட்டுமின்றி சமூக விழிப்புணர்வு செயல் ஒன்றையும் நிகழ்ச்சியில் செய்துள்ளார்.
பிக்பாஸ் ஜோடிகள்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ரியாலிட்டி ஷோக்களுக்கான எதிர்பார்ப்பை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்ற பெருமை விஜய் டிவிக்கு உண்டு. திரைத்துறையின் உச்சகட்ட நடிகர்களான சூர்யா மற்றும் கமல் போன்ற நட்சத்திரங்களை சின்னத்திரைக்கு கொண்டு வந்த பெருமையும் சேரும். அந்த வகையில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபலங்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி சில வாரங்களாக சேனலில் ஒளிபரப்பாகிறது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கைகள்!
நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகிய இருவரும் நடுவர்களாக உள்ளனர். கேப்ரில்லா-ஆஜித், ஜித்தன் ரமேஷ்-சம்யுக்தா, பாலாஜி-நிஷா, சோம் சேகர்-ஐஸ்வர்யா, சென்றாயன்-ஜூலி, அனிதா-ஷாரிக் ஆகியோர் ஜோடிகளாக நடனமாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து அனிதா மற்றும் ஷாரிக் ஜோடிகள் ஒவ்வொரு வாரமும் சிறந்த பங்களிப்பை செய்து வருகின்றனர். அந்த வகையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளாக வேடம் இட்டு இருவரும் நடனமாடுவது போல் உள்ளது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே அனிதா தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் நிகழ்ச்சியின் நடுவர்கள் அசந்து விட்டனர். மேலும், இதற்காக அனிதாவிற்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி, பாராட்டி வருகின்றனர். அனிதா எப்போதுமே சமூக விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதற்கு தயங்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.