நீரில் மூழ்கும் லட்சுமி, பாய்ந்து வந்து உயிரை காப்பாற்றிய பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி, ஹேமா மற்றும் பாரதி கண்ணம்மாவும் தீம் பார்க் சென்று இருக்கின்றனர். அங்கே லக்ஷ்மிக்கு ஆபத்து ஏற்பட பாரதி அவரை காப்பாற்றுவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி ஹேமா பள்ளியில் இருந்து சுற்றுலா அழைத்து சென்று இருக்கின்றனர். அவர்களுடன் பாரதியும் கண்ணம்மாவும் சென்றிருக்கின்றனர். அம்மா அப்பா உடன் போன சந்தோஷத்தில் லட்சுமி இருக்க ஹேமாவும் சமையல் அம்மா வந்த சந்தோஷத்தில் இருக்கிறாள். பாரதியும் கண்ணம்மாவும் நீண்ட நாட்களுக்கு பின் ஒன்றாக இருக்கின்றனர். கண்ணம்மாவிற்கு லக்ஷ்மியின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகம் இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய முல்லை – இவருக்கு பதில் இனி இவர் தான்!
ஆனாலும் அப்படி இருக்காது என அவர் நம்பிக் கொண்டு இருக்கிறார். குழந்தைகள் மிகவும் சந்தோசமாக தங்களுடைய டூரை என்ஜாய் செய்து கொண்டு வருகின்றனர். அடுத்து வர இருக்கும் எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் லக்ஷ்மியும் ஹேமாவும் தண்ணீரில் விளையாட போக பாரதி ஹேமாவிடம் பத்திரமாக விளையாட வேண்டும் என சொல்கிறார். அப்போது லட்சுமி ஹேமா தனது நண்பர்களுடன் பால் விளையாட அப்போது லட்சுமி ஆழத்திற்கு பாலை எடுக்க செல்கிறார்.
சஞ்சீவ், ஆலியாவுக்கு 2வது குழந்தை பிறந்த நேரம் இப்படியும் நடக்குமா? வியக்கும் ரசிகர்கள்!
அப்போது பாரதிக்கு போன் வர அவர் போன் பேச சென்றுவிடுகிறார். கண்ணம்மாவிற்கு ஜூஸ் கொடுக்க கண்ணம்மாவும் அதை கொண்டு பாரதியிடம் கொடுக்க சென்று விடுகிறார். அந்த நேரம் லட்சுமி தண்ணீரில் மூழ்கி விட ஒரு பையன் வந்து பாரதியிடம் லட்சுமி ஆபத்தில் இருப்பதாக சொல்கிறார். அப்போது பாரதி வேகமாக ஓடி வந்து தண்ணீரில் குதித்து லக்ஷ்மியை காப்பாற்ற நீரில் மூழ்கி மூச்சு விடமுடியாமல் லட்சுமி இருக்கிறாள். அவளுக்கு முதலுதவி செய்ய லட்சுமி கண் விழிக்கிறாள். அவள் எழுந்ததும் தாங்க் யூ அப்பா லவ் யூ என சொல்ல பாரதி கண்ணீருடன் அணைத்து கொள்கிறார்.