வெண்பா செய்த சூழ்ச்சியால் மீண்டும் மனம் மாறும் பாரதி? – கண்ணம்மாவின் அதிரடி பதில்!
இத்தனை வருடங்கள் தனது அறியாமையால் வாழ்க்கையை தொலைத்து விட்டதாகவும், இனி கண்ணம்மா மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள பாரதி தற்போது புதிய குழப்பத்தில் சிக்கி உள்ளார்.
பாரதியின் குழப்பம்:
பாரதி டெல்லியில் இருந்து DNA டெஸ்ட் மூலம் தெரிந்து கொண்ட உண்மையை சொல்ல வந்திருக்கும் நேரத்தில், ஹேமா மாடியில் இருந்து குதிக்க போவதை அறிந்து அனைவர் முன்னிலையிலும் பாரதி நான் தான் ஹேமாவின் அப்பா என்பதை சொல்லி விடுகிறார். தான் DNA டெஸ்ட் எடுத்தது, அதன் ரிசல்ட் படி ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தனது குழந்தைகள் தான் என்பதை தெரிந்து கொண்டதாக சொல்லி, அனைவரின் முன்னாலும் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார் பாரதி.
Follow our Instagram for more Latest Updates
அப்போது இப்படியே விட்டால் இந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்து விடும் என்று பயந்து, அது எப்படி பாரதி இதற்கு முன்னால் 2 முறை உனக்கு டெஸ்ட் எடுத்த போது குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று தான் வந்தது. இப்போது மட்டும் எப்படி இது சாத்தியம் என்று வெண்பா கேட்கிறார். இதனை கேட்டு பாரதி, சற்று அமைதியாகி குழப்பமடைகிறார்.
ராதிகாவிடம் நெருக்கமாக இருக்க நினைக்கும் கோபி.. குறுக்கே வந்த இனியா- “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
Exams Daily Mobile App Download
அப்போது, கண்ணம்மா வந்து வெண்பா சொல்வது சரிதானே, நீங்க எப்படி குழந்தைகளுக்கு அப்பாவாக முடியும் என்று வெறுப்பின் உச்சக்கட்டத்தில் கேட்கிறார். வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதி மீண்டும் மனம் மாறி விடுவாரா? அப்படி பாரதி உறுதியாக கண்ணம்மாவை நம்பி வந்தாலும் கண்ணம்மா பாரதியை மீண்டும் ஏற்றுக் கொள்வாரா அல்லது இத்தனை வருடமாக சந்தேகத்தில் இருந்த பாரதியை வெறுத்து ஒதுக்கி விடுவாரா என்று பரபரப்பான காட்சிகள் இனி வரும் நாட்களில் பாரதி கண்ணம்மா சீரியலில் வர உள்ளது.