முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – விரைவில் சீசன் 2 தொடக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!

0
முடிவுக்கு வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - விரைவில் சீசன் 2 தொடக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!
முடிவுக்கு வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - விரைவில் சீசன் 2 தொடக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!
முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – விரைவில் சீசன் 2 தொடக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!

பாரதி கண்ணம்மா தொடர் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் முடிவடைந்து சில வாரங்களில் சீசன் 2 அறிமுகமாக இருக்கும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது தான் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பாரதி தான் தன்னுடைய அப்பா என்பதை லட்சுமி அறிந்துகொள்கிறார். இவ்வளவு நாள் அப்பாவை விட்டு பிரிந்து இருந்திருக்கிறோம். இதற்கு மேலும் பிரிந்திருக்க முடியாது என நினைத்து பாரதியுடனே இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பாரதியை டாக்டர் அப்பா என அழைக்க ஆரம்பித்துவிட்டார்.

பாக்கியாவை படத்திற்கு கூப்பிடும் எழில், கோபியை வர வேண்டாம் என எச்சரிக்கை – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம்!

கண்ணம்மாவும் பாரதியுடன் இருக்கும்படியான சூழ்நிலை அமைந்துவிடுகிறது. பாரதி, கண்ணம்மா, லட்சுமி, ஹேமா என நான்கு பேரும் கண்காட்சி சென்றுள்ளனர். அங்கு லட்சுமி நீச்சல் கற்று கொள்கிறாள். அப்போது எதிர்பாராத விதமாக லட்சுமி நீரில் மூழ்கிவிடுகிறார். உடனே பதறிப்போய் லட்சுமியை தூக்கி லட்சுமியின் உயிரை பாரதி காப்பாற்றுகிறார். பாரதியை அறியாமலேயே தந்தை உணர்வை பாரதி உணருகிறார். விரைவில் பாரதியும் கண்ணம்மாவும் சேரும்படியாக தான் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

திடீரென மயங்கி விழுந்த ‘நாம் தமிழர்’ சீமான் – தொண்டர்கள் அதிர்ச்சி! நடந்தது என்ன?

இந்நிலையில் விரைவில் பாரதி கண்ணம்மா தொடர் முடியப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் முடிவடைந்து சில வாரங்களில் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடரவுள்ளது. பாரதி கண்ணம்மா சீசன் 2ல் பழைய கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தான் நடிக்கவுள்ளார். லட்சுமியும், ஹேமாவும் பெரிய குழந்தைகளாக வளர்ந்த பின்பு காட்டுவது போல சீரியல் ஆரம்பமாகவுள்ளது. சீசன் 1 ஐ போலவே சீசன் 2 ம் மக்களின் மத்தியில் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here