லக்ஷ்மியை மகளாக ஏற்றுக் கொண்ட பாரதி, சந்தோஷத்தில் கண்ணம்மா – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
லக்ஷ்மியை மகளாக ஏற்றுக் கொண்ட பாரதி, சந்தோஷத்தில் கண்ணம்மா - சீரியலில் அடுத்த திருப்பம்!
லக்ஷ்மியை மகளாக ஏற்றுக் கொண்ட பாரதி, சந்தோஷத்தில் கண்ணம்மா - சீரியலில் அடுத்த திருப்பம்!
லக்ஷ்மியை மகளாக ஏற்றுக் கொண்ட பாரதி, சந்தோஷத்தில் கண்ணம்மா – சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இந்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் லட்சுமி ரோட்டில் நடந்து செல்ல பாரதியின் காரை வைத்து இடித்துவிடுகிறார். பின் கண்ணம்மாவிடம் வந்து குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என ஒரு உண்மையான அப்பா போல சண்டை போடுகிறார்.

பாரதி கண்ணம்மா ப்ரோமோ:

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அது பற்றி பேச போக அதை வெண்பா கேட்டுவிடுகிறார். அதனால் இனிமேல் ஹேமா மனதில் இடம் பிடிப்பது தான் ஒரே முடிவு என வெண்பா நினைக்கிறார். மறுபக்கம் லட்சுமி கண்ணம்மாவை எல்லாரும் கணவர் இல்லை என தவறாக பேசுவதை நினைத்து வருத்தப்படுகிறார். அப்பாவை பற்றி இனிமேல் யாரிடமும் கேட்க கூடாது நாமளே கண்டுபிடிப்போம் என முடிவு செய்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கதாபாத்திரம் – வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில் பல திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹேமா உடன் பாரதி காரில் வந்து கொண்டே இருக்க, அங்கே லட்சுமி குறுக்கே வருகிறார். அவர் மீது பாரதி காரை இடிக்க வர ஆனால் பாரதி சுதாரித்து காரை நிறுத்துகிறார். அப்போது லட்சுமி காரில் இடித்து கீழே விழுகிறார். அப்போது ஹேமா அது லட்சுமி என சொல்லிக் கொண்டே செல்ல, பாரதி பதட்டமாக லட்சுமியை காரில் ஏற்றி வீட்டில் விடுகிறார்.

அப்போது கண்ணம்மாவிடம் கோவமாக குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வது என தெரியாதா என கேட்கிறார். இப்படி ரோட்டில் விட்டிருக்க என சத்தம் போட நல்ல பொறுப்பான அப்பா மாதிரி இப்போது தான் பேசுறீங்க என கண்ணம்மா சொல்கிறார். ஆமாம் அப்பா தான் அப்படியே வைத்துக் கொள் என பாரதி சொல்ல எனக்கு இது போதும் என கண்ணம்மா சந்தோசப்படுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை அதிகரித்து உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!