முடிய போகும் நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் படைத்த சாதனை – இதுக்கு பல மாசம் ஆகிருச்சே!!

0
முடிய போகும் நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் படைத்த சாதனை - இதுக்கு பல மாசம் ஆகிருச்சே!!
முடிய போகும் நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் படைத்த சாதனை - இதுக்கு பல மாசம் ஆகிருச்சே!!
முடிய போகும் நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் படைத்த சாதனை – இதுக்கு பல மாசம் ஆகிருச்சே!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்தது. இந்நிலையில் சில மாதங்களாக கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக TRPயில் சரிவை கண்ட நிலையில், தற்போது இந்த வாரம் TRPயில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், முன்னணி சீரியல்கள் லிஸ்டில் முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து 10க்கு அதிகமான TRP ரேட்டிங் பெற்று இந்த சீரியல் சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் சீரியல் கதையை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் தேவை இல்லாத கன்டென்ட் கொடுத்ததால் TRPயில் பெரும் சரிவு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நம்பர் ஒன் சீரியலாக இருந்து வந்த பாரதி கண்ணம்மா. பெரும் சரிவை கண்டு நான்காவது இடத்திற்கு சென்றது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் இந்த சீரியல் இன்னும் 1 மாதத்தில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சீரியலிலும் பல மறைக்கப்பட்ட உண்மையை வெளியே காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் வெண்பா திருமண எபிசோடுகள் காட்டப்பட்டது. பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என வெண்பா ஓடி வர பாரதியும் தாலி கட்ட சென்று விடுகிறார். ஆனால் அதற்குள் கண்ணம்மா வந்து அதனை தடுத்து விடுவது போல காட்டப்பட்டது.

உலக நாடுகளை மிரள வைக்கும் பாகிஸ்தானின் திட்டம் .. வட்டியில்லாமல் கடன் வழங்கும் வங்கிகள்!

Exams Daily Mobile App Download

கதையில் இப்படி ஒரு திருப்பம் வேண்டும் என ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில், சீரியல் கதைக்கு காரணமாக இருந்த வெண்பாவின் கதை முடிந்துவிட்டது என்பதால், சென்ற வார TRP ரேட்டிங்கில் 10க்கு மேல் புள்ளிகள் பெற்று விஜய் டிவியில் டாப் இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்தது. அதனால் ரசிகர்கள் பலர் சீரியல் குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!