
செய்த காரியங்களை நினைத்து வருத்தப்படும் பாரதி.. மன்னிப்பாரா கண்ணம்மா? வெளியான “பாரதி கண்ணம்மா” ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதிக்கு கண்ணம்மா தவறு செய்யவில்லை என வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கண்ணம்மாவை அசிங்கப்படுத்தியது முதல் லட்சுமியை காயப்படுத்தியது வரை பாரதி நினைத்து பார்த்து கவலைப்படுவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை நெருங்கிவிட்டது. இந்நிலையில் கண்ணம்மா தவறு செய்யவில்லை எனவும், 10 ஆண்டுகளாக கண்ணம்மாவை தவறாக புரிந்து கொண்டு இருப்பது எல்லாம் பாரதிக்கு தெரிய வருகிறது. அது மட்டுமில்லாமல் ஹேமாவும் லக்ஷ்மியும் தன்னுடைய குழந்தைகள் தான் என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது. அதனால் உடனே கண்ணம்மாவை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதி காரில் சென்னைக்கு வருகிறார்.
அமுதவாணனிடம் நடனம் ஆடி காட்டும் தனம், ஜனனி – கலகலப்புடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
Exams Daily Mobile App Download
அப்போது கண்ணம்மாவை எப்படி எல்லாம் பேசி அசிங்கப்படுத்தினோம் என நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். மேலும் லட்சுமி தன்னை அப்பா என நினைத்து ஆசையாக பேச வந்த போதும் கூட பாரதி தவறாக புரிந்து கொண்டு வெறுத்ததை எல்லாம் நினைத்து பார்க்கிறார். மேலும் ஹேமா லட்சுமி இருவரின் DNA ரிப்போர்ட் மேட்ச் ஆனது குறித்து டாக்டர் சொன்னதை நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மேலும் பாரதி உண்மையை சொன்னதும் கண்ணம்மா பாரதியை ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடில் வர இருக்கிறது.