அப்பா யாரை விவாகரத்து செய்ய போகிறார் என குடும்பத்திடம் கேட்ட ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
அப்பா யாரை விவாகரத்து செய்ய போகிறார் என குடும்பத்திடம் கேட்ட ஹேமா - இன்றைய
அப்பா யாரை விவாகரத்து செய்ய போகிறார் என குடும்பத்திடம் கேட்ட ஹேமா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
அப்பா யாரை விவாகரத்து செய்ய போகிறார் என குடும்பத்திடம் கேட்ட ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ரோஹித்தை நினைத்து கடுப்பில் இருக்கிறார். மறுபக்கம் ஹேமா அப்பா யாருக்கு விவாகரத்து கொடுக்க போகிறார் என ஹேமா சௌந்தர்யா மற்றும் குடும்பத்திடம் கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ரோஹித் என்ன சொன்னாலும் கேட்காமல் இருப்பதை நினைத்து கோவமாக இருக்கிறார். அப்போது சாந்தி வர என்னாச்சுமா என கேட்கிறார். அப்போது வெண்பா அந்த ரோஹித்திடம் நான் பாரதியை காதலிப்பதாக சொல்லிவிட்டேன் ஆனால் அவன் மிகவும் கேடு கெட்டவனாக இருக்கிறான் என சொல்கிறார். என் அம்மாவும் அவனும் சேர்ந்து கொண்டு என்னை டாச்சர் செய்வதாக வெண்பா புலம்புகிறார். அப்போது சாந்தி நீங்க எத்தனை பேரை டாச்சர் செய்து இருக்கீங்க அது போல தான் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் சௌந்தர்யா வேணு காபி குடித்து கொண்டிருக்க அகில் வருகிறார். பாரதி இரவு பேசியது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என சொல்ல அப்போது சௌந்தர்யா அவனை பற்றி தான் தெரியுமே நீ ஏன் கோவப்படுகிறாய் என சொல்கிறார். பின் ஹேமா வந்து டாடி எங்கே என கேட்க அவன் காலையில் மருத்துவமனை சென்றுவிட்டான் என சௌந்தர்யா சொல்கிறார். அப்போது ஹேமா உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என சொல்லி அப்பா யாருக்கு விவாகரத்து கொடுக்க இருக்கிறார் என கேட்கிறார்.

அப்போது நீங்க தான சொன்னீங்க கணவன் மனைவி பிடிக்காமல் இருந்தால் பிரிந்துவிட தான் விவாகரத்து வாங்குவார்கள் என அப்போ என் அம்மா உயிரோட தான் இருக்காங்களா எங்கே இருக்காங்க என கேட்கிறாள். அம்மா இருக்காங்க என்று மட்டும் சொல்லுங்கள் நானும் சமையல் அம்மாவும் சேர்ந்து கண்டிப்பாக என் அம்மாவை தேடி கண்டுபிடிப்போம். சமையல் அம்மா கண்டிப்பாக எனக்கு உதவி செய்வார் சொல்லுங்கள் என ஹேமா கேட்க அப்போது சௌந்தர்யாவை பார்க்க ஒருவர் வருகிறார். அதனால் அப்பறம் பேசிக் கொள்ளலாம் என சௌந்தர்யா சொல்கிறார்.

மறுபக்கம் ரோஹித் ஷர்மிளாவை பார்த்துவிட்டு கண்ணை கட்டிக் கொண்டு வருகிறார். ஷர்மிளா ஏன் மாப்பிள்ளை இப்படி என கேட்க அப்போது ரோஹித் நான் காலையில் எழுந்ததும் முதலில் வெண்பா முகத்தை தான் பார்ப்பேன் என சொல்கிறார். பின் வெண்பா எங்கே என கேட்க வெண்பா ரூமிற்கு ஷர்மிளா அழைத்து செல்கிறார். வெண்பா தூங்கி கொண்டிருக்க அப்போது ரோஹித் அவருடைய பெட்டில் அமர்ந்து வெண்பா உன் முகத்தை தான் பார்க்க வேண்டும் என சொல்லி முகத்தை பார்க்கிறார். வெண்பா ரோஹித்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன செய்கிறாய் என கேட்க எனக்கு உன் முகத்தை தான் பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த வார ப்ரோமோ ரிலீஸ்! குடும்பத்துடன் கொண்டாட்டம்!

பின் சத்தம் கேட்டு ஷர்மிளா வர அப்போது ரோஹித் ஷர்மிளாவை மிகவும் அழகாக இருப்பதாக சொல்கிறார். உங்களுடைய அழகு தான் வெண்பாவிற்கு வந்துள்ளது என சொல்ல ஷர்மிளா வெட்கப்படுகிறார். பின் ஷர்மிளா வெண்பா ரோஹித்திற்கு டிக்கெட் போடுகிறார். இருவரும் படத்திற்கு சென்று வாருங்கள் என சொல்ல அதை பார்த்து வெண்பாவிற்கு பயங்கரமாக கோவம் வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!