சீரியல் முடிய இருக்கும் நேரத்தில் என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் நடிகை – குழப்பத்தில் ரசிகர்கள்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரைச்செல்வி சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் பலரது மனதை கவர்ந்த முன்னணி சீரியல்களுள் ஒன்று. இந்த சீரியலில் பல திருப்பங்கள் வெளி வராமல் இருந்த நிலையில், பாரதி எப்போது DNA டெஸ்ட் எடுப்பார் என்பது தான் தமிழக மக்களின் ஒரே கேள்வியாக இருந்தது. அது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் இது பற்றிய மீம்கள் கூட வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது பாரதி DNA டெஸ்ட் எடுத்து உண்மையை தெரிந்து கொண்டுள்ளார். அது மட்டுமில்லாமல்வெண்பா தான் எல்லா நாச வேலைகளையும் செய்தது என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் இன்னும் சில எபிசோடுகளில் இந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் கதையில் பெரிய ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது. அதாவது புதிதாக ஒரு கதாபாத்திரம் ஒன்று என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.அதுவும் புதிதாக வர இருக்கும் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் தாமரை செல்வி நடிக்க இருக்கிறார். அது என்ன கதாபாத்திரம்? அதனால் கதையில் எப்படி எல்லாம் மாற்றம் ஏற்பட இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் சீரியல் முடிய இருக்கும் நேரத்தில் இந்த புது கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருக்கின்றனர்.