கர்ப்பமாகும் வெண்பா, பாரதிதான் தந்தையா ? அதிரடி திருப்பங்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியல் அனைவருக்கும் பிடித்தமான சீரியல் ஆக உள்ளது. இந்த சீரியலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்து வந்தது. ஆனால் தற்போது கதை சற்று இழுவையாக சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது முந்தைய எபிசோடுகளில் கண்ணம்மாவின் மகள் லட்சுமிக்கு பாரதிதான் தன்னுடைய அப்பா என்று தெரிய வருகிறது. இதனை லட்சுமி பாரதியிடம் கூறுகிறார். இந்த நிலையில் லட்சுமி, ஹேமாவிடம் உண்மையை கூறி விடுவாரோ என்று பாரதி ஹேமாவை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கிறார். மேலும் ஹேமாவை வேறு பள்ளிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் கோபமடைந்த கண்ணம்மா என்னை மீறி ஹேமாவை எப்படி வேறு பள்ளிக்கு மாத்துறீங்கனு பாக்குறேன் என்று சவால் விடுகிறார். இந்த நிலையில் கதையின் வில்லி நாயகி வெண்பாவுக்கும், ரோஹித்துக்கும் நிச்சயதார்த்தம் நடத்த வெண்பாவின் அம்மா முடிவு செய்கிறார். அதற்காக பாரதியின் வீட்டிற்கு சென்று அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார். இதனை அடுத்து சௌந்தர்யா நாங்கள் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்வோம் என்று கூறுகிறார். மேலும் பல பிரச்சனைகளுக்கு நடுவே நிச்சயதார்த்தம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
வங்கி அதிகாரியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
இதன் பிறகு வெண்பாவும், ரோஹித்தும் சேர்ந்து மது குடித்துவிட்டு தவறு செய்கின்றனர். இதை தெரிந்து கொண்டவுடன் வெண்பா கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார். இதற்கு அடுத்து வெண்பா, பாரதியை குடிக்க வைத்து உன்னால தான் நான் கர்ப்பம் ஆகிருக்கேன் என்று சொல்வது போல் கதை நகரும் என்பது போல் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பாரதி ஹேமாவை வேற ஸ்கூலில் சேர்ப்பது போல் ப்ரோமோ வெளியாகி இருப்பது ரசிகர்களிடைய மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கதை விறுவிறுப்பு செல்ல வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்