திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் வெண்பா, அதிர்ச்சியில் குடும்பம் – சூடு பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’!

0
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் வெண்பா, அதிர்ச்சியில் குடும்பம் - சூடு பிடிக்கும் 'பாரதி கண்ணம்மா'!
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் வெண்பா, அதிர்ச்சியில் குடும்பம் - சூடு பிடிக்கும் 'பாரதி கண்ணம்மா'!
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் வெண்பா, அதிர்ச்சியில் குடும்பம் – சூடு பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சீரியலில் வெண்பாவுக்கு பாரதியின் அம்மா கொடுத்த ட்விஸ்ட் காரணமாக வெண்பாவிற்கு நிச்சயம் ஆகி உள்ளது. இதை தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா :

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் வெண்பாவின் திருமணம் நடந்தால் மொத்த கதையும் ஓவர் என்பது போல் சீரியல் ஸ்டோரி வந்து நிற்கிறது. வெண்பாவுக்கு திருமணம் நடந்தால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என சவுந்தர்யா நினைக்கிறார். அதே போல் அவரின் கணவர் வேணுக்கும் கேன்சர் இருப்பது போல் கதை செல்கிறது. இது வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கையில் நேற்று முன் தினம் வெண்பாவின் நிச்சயதார்த்தம் பல திருப்பங்களுடன் நடந்து முடிந்துள்ளது. அந்த நிச்சயத்தில் வெண்பா எதிர்பார்க்காத ட்விஸ்டை சவுந்தர்யா கொடுத்தார்.

அதாவது ரோஹித்தை திருமணம் செய்து கொள்ளாமல் எஸ்கேப் ஆக வேண்டும் என்பது வெண்பாவின் பிளான். அதற்காக பல பிளான் போட்டார். அதற்காக நிச்சயதார்த்தத்தில் ரோகித்தை அனாதை என கூறி பெரிய பிரச்சனை செய்தார் வெண்பா. இதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகி விட்டனர். ஆனால் கடைசி நேர ட்விஸ்டாக சவுந்தர்யா வெண்பாவுக்கு அதிர்ச்சி தந்தார். அதாவது சவுந்தர்யா, ரோஹித்தை மகனாக தத்து எடுத்துக் கொள்வதாக அறிவித்து வெண்பா-ரோஹித் நிச்சயத்தை நடத்தி வைத்தார். மேலும் நிச்சயதார்த்தம் நல்லப்படியாக நடந்ததை நினைத்து சவுந்தர்யா குடும்பத்தாரிடம் சந்தோஷமாக பேசி கொண்டிருக்கும் போது அங்கு வரும் ரோஹித் நீங்க எனக்கு பண்ண விஷயம் மிகப்பெரிய காரியம்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு!

எவ்வளவு பெரிய குடும்பத்தை சேர்ந்த நீங்க என்னை தத்தெடுக்குறதா சொல்லி இருக்கீங்க என கண் கலங்கி பேசுகிறார். இதையடுத்து அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர், இருப்பினும் வெண்பா வீட்டுக்கு போகாமல் ஹோட்டலிலே இருக்கிறார். கொஞ்ச நேரம் என்னை தனியா விடு என சாந்தியிடம் கூறுகிறார். சாந்தி போனதும் சரக்கு பாட்டிலுடன் வரும் ரோஹித் வெண்பாவை வெறுப்பேற்றி குடிக்க வைக்கிறார். இதையடுத்து, வெண்பாவும், ரோஹித்தும் நிதானம் தவறியதால், வெண்பா கர்ப்பம் ஆவாரா? இந்த நோக்கில் கதை நகருமா ? என்ற பல கேள்விகளுடன் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!