லட்சுமிக்கு சாப்பாடு ஊட்டும் பாரதி, மகிழ்ச்சியில் கண்ணம்மா – பாரதி கண்ணம்மா அதிரடி திருப்பம்!

0
லட்சுமிக்கு சாப்பாடு ஊட்டும் பாரதி, மகிழ்ச்சியில் கண்ணம்மா - பாரதி கண்ணம்மா அதிரடி திருப்பம்!
லட்சுமிக்கு சாப்பாடு ஊட்டும் பாரதி, மகிழ்ச்சியில் கண்ணம்மா - பாரதி கண்ணம்மா அதிரடி திருப்பம்!
லட்சுமிக்கு சாப்பாடு ஊட்டும் பாரதி, மகிழ்ச்சியில் கண்ணம்மா – பாரதி கண்ணம்மா அதிரடி திருப்பம்!

பாரதி கண்ணம்மா சீரியலில் கதை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது, கதையில் விறுவிறுப்பான ட்விஸ்ட் வர இருக்கிறது. இதனால் சீரியல் அதிக எதிர்பார்ப்புடன் செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

கடந்த சில வாரங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் சொதப்பலாக செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது கடந்த சில எபிசோடுகளில் பாரதி ஹேமாவிடம், முன்னாள் காதலியோட போட்டோவை காமித்து இதுதான் உன்னுடைய அம்மா என்று சொல்கிறார். இதனால் கோபமடையும் கண்ணம்மா பாரதியிடம் ஹேமா, லட்சுமி ரெண்டு பேருமே நம்ம குழந்தைகள் தான் அப்படினு உண்மையை சொல்கிறார். மேலும் இந்த உண்மையை லட்சுமி ஹேமாவிடம் சொல்லிவிடுவார் என்று ஹேமாவோட ஸ்கூல மாத்த பாரதி முயற்சி செய்கிறார். இதன் பிறகு ஹேமா, லட்சுமி பாசத்தை பார்த்ததும் மனசு மாறுகிறார்.

இதையடுத்து வெண்பாவும், ரோஹித்தும் மது குடிச்சிட்டு தப்பு பண்ணுறாங்க. இதனால் வெண்பா ரொம்பவே கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். மேலும் பாரதியை எப்படி கல்யாணம் பண்றது அப்படினு யோசிக்கிறார். மற்றொரு பக்கம் ரோஹித் வெண்பாவை நடந்த தப்பை சொல்லிக்காட்டி வெறுப்பேத்துகிறார். இந்த நிலையில் கதையில் புதிய திருப்பமாக பாரதியின் ஹாஸ்பிடலை தீவிரவாதிகள் கடத்துகின்றனர். உடனே அவரோட குடும்பத்த காப்பாற்ற பாரதி தனியாக களமிறங்குகிறார். இதனை தொடர்ந்து தீவிரவாதிகள் ஹாஸ்பிடலில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு சாப்பாடு வழங்குகின்றனர்.

TNPSC: பெண்களுக்கான இடஒதுக்கீடு பட்டியல் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த சாப்பாடை பத்து நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று ஆர்டர் போடுகின்றனர். இதன் பிறகு பாரதியும், லட்சுமியும் ஒருவருக்கொருவர் சாப்பாட்டை ஊட்டி கொள்கின்றனர். இதை அடுத்து தீவிரவாதி கூட்டத்தின் தலைவன் பாரதியை தனியாக அழைத்து பேசுகிறார் . பின்னர் பாரதியிடம் மினிஸ்டரின் ஆபரேஷன் குறித்து கூறுகிறார் . இதனை தொடர்ந்து பாரதியும் மருந்துகளை எழுதி கொடுக்க, இதை தீவிரவாத கூட்டத்தில் உள்ள டாக்டரிடம் காட்டிய பிறகு வெளியே கொண்டு போய் கொடுக்குமாறு கூறுகிறார். மேலும் ஹாஸ்பிடலில் உள்ள நர்ஸ் ஒருவரிடம் தீவிரவாதி ஒருவன் தவறாக நடந்து கொள்கிறார் . இதனை தெரிந்து கொண்ட பாரதி கோபமடைகிறார். இதனால் பாரதி அவர்களுடன் சண்டையிடுவது போல் காட்சிகள் அடுத்து வர உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!