
திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் குட் நியூஸ்.. பாரதி கண்ணம்மா நடிகரின் வாழ்த்துக்களை குவிக்கும் பதிவு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அகில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சுகேஷுக்கு ஒரு மாதத்திற்கு முன் திருமணம் முடிந்த நிலையில், தன்னுடைய முதல் மாத திருமண நாளை மேடை அமைத்து விமர்சையாக கொண்டாடி இருக்கிறார்.
நடிகர் சுகேஷ்:
பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் முடிவு எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சுகேஷ். இதற்கு முன்னதாக இந்த காதாபாத்திரத்தில் அகிலன் நடித்து வந்தார். அவருக்கென தனி ரசிகர்கள் இருந்தனர்.அவருடைய இடத்தை பிடித்து சுகேஷ் தற்போது தனி ரசிகர்களை சம்பாரித்து இருக்கிறார்.
விஜய் டிவி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. பிக் பாஸ் முடிந்ததும் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சுகேஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணம் குறித்து இன்னும் பல ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கும் நிலையில், தன்னுடைய மனைவி உடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படம் அவருடைய முதல் மாத திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது. மேலும் அந்த புகைப்படங்களில் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கமெண்ட்களாக தெரிவித்து வருகின்றனர். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் தன்னுடைய திருமண நாளை விமர்சையாக கொண்டாடும் அவருக்கு பல வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கிறது.