
பாரதியை பற்றி சொல்ல பாரதிக்கே போன் செய்யும் கண்ணம்மா – சுவாரஸ்யத்துடன் வெளியான “பாரதி கண்ணம்மா 2” ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா 2” சீரியலில், பாரதிக்கு பொண்ணு பார்க்க குடும்பத்தினர் சென்று இருக்கின்றனர். ஆனால் கண்ணம்மா பாரதியை பழி வாங்க வேண்டும் என நினைத்து அவரை பெண் வீட்டார் முன் அசிங்கப்படுத்துகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
பாரதி கண்ணம்மா 2
பாரதி கண்ணம்மா 2 சீரியலில், கண்ணம்மாவின் குடும்பத்தை தன்னுடைய குடும்பமாக நினைத்து சித்ரா வாழ தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவர் பாரதியை சந்தித்த முதல் சந்திப்பிலேயே இருவரும் மோதிக் கொண்டனர். கண்ணம்மா மீது கோவப்பட்ட பாரதி அவரை அடித்து விடுகிறார். அதனால் கண்ணம்மா அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என நினைக்கிறார். மறுபக்கம் பாரதி குடும்பத்தினர் பெண் பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
ஈஸ்வரியை எதிர்க்கும் பாக்கியா.. கதையில் வரும் ட்விஸ்ட் – “பாக்கியலட்சுமி” அப்டேட்!
அப்போது பாரதி வர அவர் வாசலில் நின்று உள்ளே வரமாட்டேன் என சொல்கிறார். உடனே பெண்ணின் அப்பா இந்த மாப்பிள்ளை வேண்டாம் என சொல்லிவிடுகிறார். பின் பாரதி எல்லாத்துக்கும் அவள் தான் காரணம் என சொல்லி, காரில் பசை தடவி தனது சட்டையை கிழித்த விஷயத்தை குடும்பத்திடம் சொல்கிறார். பின் கண்ணம்மாவை சந்தித்த பாரதி, எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை இப்படி பெண் வீட்டார் முன் அசிங்கப்படுத்துவாய் என கேட்க, உடனே உனக்கு அவன் தான் சரியான ஆளு என கண்ணம்மா சொல்கிறார்.
யார் என பாரதி கேட்க, அவன் பேரு பாரதி அன்னவாசல் பாரதி என சொல்லி கண்ணம்மா போன் செய்கிறார். உடனே பாரதி இது உன் நம்பரா என கேட்க, ஆமாம் என கண்ணம்மா சொல்கிறார். நான் தான் பாரதி என சொல்ல, கண்ணம்மாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.