விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் புதிய அவதாரம் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' ரோஷினியின் புதிய அவதாரம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' ரோஷினியின் புதிய அவதாரம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் புதிய அவதாரம் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கதாப்பாத்திரத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது மாடர்ன் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ரோஷினி

தமிழ் சின்னத்திரையில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாத நடிகை ரோஷினி, மாடலிங் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லாமல் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மாவாக அறிமுகமான இவர் ஆரம்பத்தில் சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், காலப்போக்கில் கண்ணம்மா என்றால் ரோஷினி நியாபகத்திற்கு வரும் அளவுக்கு வளர்ந்தார்.

லக்ஷ்மியை மகளாக ஏற்றுக் கொண்ட பாரதி, சந்தோஷத்தில் கண்ணம்மா – சீரியலில் அடுத்த திருப்பம்!

அதே போல ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினிக்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று தந்தது. இதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து வரவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி தற்போது திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது இத்தொடரில் புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கதாபாத்திரம் – வைரலாகும் புகைப்படம்!

இதற்கிடையில் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ என்ற சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் ரோஷினி தற்போது மார்டர்ன் லுக்கில் ஒரு போட்டோஷூட்டை நிகழ்த்தி இருக்கிறார். அந்த வகையில், இந்த வார ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்காக இவர் அணிந்து வந்த கருப்பு நிற மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரோஷினி ஹரிப்ரியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட, இதுவரை கண்ணம்மா என்ற கதாப்பாத்திரத்தில் குடும்ப குத்துவிளக்காக இவரை பார்த்து வந்த ரசிகர்கள், ரோஷினியின் மாடர்ன் லுக்கை கண்டதும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!