குழந்தைகளுடன் வெளியே வந்த பாரதி கண்ணம்மா, சந்தியாவை பழி வாங்க நினைக்கும் சாமியார் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
குழந்தைகளுடன் வெளியே வந்த பாரதி கண்ணம்மா, சந்தியாவை பழி வாங்க நினைக்கும் சாமியார் - இன்றைய
குழந்தைகளுடன் வெளியே வந்த பாரதி கண்ணம்மா, சந்தியாவை பழி வாங்க நினைக்கும் சாமியார் - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
குழந்தைகளுடன் வெளியே வந்த பாரதி கண்ணம்மா, சந்தியாவை பழி வாங்க நினைக்கும் சாமியார் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” மற்றும் “ராஜா ராணி 2” சீரியல் மகா சங்கமத்தில் பாரதி கண்ணம்மா மற்றும் குழந்தைகளுடன் ஜானகி அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற காரில் வெளியே செல்கிறார். அனைவரும் தென்காசிக்கு செல்கின்றனர். அங்கே சந்தியா குடும்பத்தை அசிங்கப்படுத்த சாமியார் புதிதாக திட்டமிடுகிறார்.

மகா சங்கமம்:

இன்று மகா சங்கமம் சீரியலில் பாரதி ஹேமாவுடன் கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். ஹேமாவை மட்டும் மேலே அனுப்பி கண்ணம்மாவை அழைத்து வர சொல்கிறார். அப்போது ஹேமா மாடிக்கு செல்ல லட்சுமி கிளம்பி கொண்டிருப்பதாக கண்ணம்மா சொல்கிறார். பின் பாரதி கண்ணம்மாவிற்கு போன் செய்து கிளம்பியாச்சா என கேட்க லட்சுமி கிளம்பி கொண்டிருப்பதாக சொல்கிறார். பின் கண்ணம்மா லட்சுமி ஹேமா பாரதி என அனைவரும் கிளம்பி செல்கின்றனர். அப்போது பாரதி நான் நன்றாக பேசுவதை சாதகமாக பயன்படுத்தி நீ கற்பனை செய்ய கூடாது என பாரதி சொல்கிறார்.

அதை கேட்டு கண்ணம்மா சரி என சொல்கிறார். நான்கு பேரும் காரில் செல்ல குழந்தைகள் சந்தோசமாக வந்து கொண்டிருக்கின்றனர். பாரதியும் குழந்தைகளை சந்தோசமாக வைத்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஹேமாவிடம் எங்கே போகலாம் என கேட்க ரோட்டில் ஒரு ஊர் பெயரை காட்டி அங்கே போகலாம் என சொல்கிறார். அதில் தென்காசி என போட்டிருக்கிறது. அது ரொம்ப தூரத்தில் இருப்பதாக பாரதி சொல்ல ஹேமா அங்கே போகலாம் என சொல்கிறார். சமையல் அம்மா சொன்ன தான் போக முடியும் என சொல்ல கண்ணம்மாவும் சரி என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ஹேமாவிற்கு பாத்ரூம் வருவதாக சொல்ல ஒரு இடத்தில் காரை பாரதி நிறுத்துகிறார். அப்போது லக்ஷ்மியை கூப்பிட ஆனால் லட்சுமி வரவில்லை என சொல்கிறார். பின் ஹேமாவை அழைத்து கொண்டு கண்ணம்மா செல்ல பாரதி லட்சுமியிடம் உனக்கு இப்படி செல்வது பிடித்திருக்கிறதா என கேட்கிறார். பிடித்துள்ளதாக லட்சுமி சொல்ல லக்ஷ்மிக்கு வாந்தி வருகிறது. அவள் சென்று வாந்தி எடுக்க பாரதி அவளை பார்த்துக் கொள்கிறார். அப்போது லட்சுமி ட்ரெஸ் பாரதி ட்ரெஸ் எல்லாம் ஈரமாகிவிடுகிறது. கண்ணம்மா லக்ஷ்மியை திட்ட பாரதி நானும் சிறு வயதில் இப்படி தான் வாந்தி எடுப்பேன் என சொல்கிறார்.

கண்ணம்மா அப்பா போலவே இருக்கிறாள் என நினைக்கிறார். பின் மறுபக்கம் சந்தியாவை பழி வாங்க சாமியார் புதிய திட்டம் ஒன்றை போடுகிறார். ஊர் மக்கள் அனைவரையும் வர சொல்கிறார். தண்டராம் போட்டு ஊரில் சாமியார் வர சொன்னதாக சொல்கிறார்கள். சிவகாமி கண்டிப்பாக போக வேண்டும் என சொல்கிறார். ஆனால் சந்தியா அந்த சாமியார் எதோ செய்ய இருப்பதாக நினைக்கிறார். ஆனால் சிவகாமி நீங்களும் கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் கண்ணம்மா பாரதி குழந்தைகளுடன் வர தென்காசியில் திருவிழா நடக்கிறது. அங்கே எல்லாரும் சேர்ந்து ராட்டினம் சுற்றி சந்தோசமாக இருக்கின்றனர்.

இந்தியாவில் வீரியமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 16,935 பேர் பாதிப்பு!

பின் லட்சுமி வளையல் வாங்கி தர சொல்ல அனைவரும் வளையல் போடுகின்றனர். கண்ணம்மாவிற்கு பாரதி வளையல் போடுகிறார். இப்போது நீ கண்ணிற்கு மை வைப்பதில்லையா என பாரதி கேட்க கண்ணம்மா அவருக்காக மை வைக்கிறார். பின் அனைவரும் சாமியாரை பார்க்க செல்ல பாரதியும் கண்ணம்மாவும் குழந்தைகளுடன் வருகிறார். பின் கூட்டத்தில் சந்தியா சரவணனை பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கிறார் பாரதி. சந்தியா குடும்பத்துடன் வந்துள்ளதை பார்த்து சாமியார் கோவப்பட அவர் எதோ பெரிய திட்டமிட்டு மாட்டிவிட நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here