விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது ட்ரெண்டாகி வரும் கோபி அவரது காதலி ராதிகாவுடன் இணைவதற்காக பல கில்லாடி வேலைகளை செய்து தப்பித்து வந்த நிலையில் தற்போது கையும் களவுமாக சிக்க போகிறார். அடுத்து வரக்கூடிய எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் வேலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்களுக்கு வழங்கப்படும் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் சம்பளம்:

விஜய் தொலைக்காட்சி சீரியல்களின் வரிசையில் டிஆர்பி ரேட்டிங்கில் இப்போது டாப் லிஸ்டில் இருக்கும் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இந்த தொடரின் கதைக்களம் தமிழ்நாட்டு மக்களின் முக்கியமாக குடும்ப பெண்களின் ஆதரவை பெற்று இந்த ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அதிக வெற்றி கோப்பைகளை தட்டி சென்றுள்ளது. அதன்படி இந்த சீரியலில் ட்ரெண்ட் என்றால் அது கோபி தான். அவ்விதமாக பாக்கியாவின் கதை மக்கள் மனதில் எவ்வளவு வரவேற்கப்பட்டதோ அதே அளவுக்கு மேலாக பல விமர்சனங்களையும், வரவேற்பையும் கோபியின் கதைக்களமும் பெற்று வருகிறது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – உண்மையை கண்டறிந்த சௌந்தர்யா!

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் உழைப்பின்றி ஊதியம் இல்லை என்ற பழமொழி வடிவில் விமர்சனங்கள் இல்லாமல் பிரபலமில்லை என்றவாறு கோபி அவரது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் பாக்கியாவிடம் எப்போது சிக்குவார்? என எதிர்பார்த்த மக்கள் இவரது நகைச்சுவைக்கு மயங்கி அவர் சிக்க வேண்டாம் இன்னும் பல கில்லாடி வேலைகளை செய்து என்டெர்டைன் செய்யட்டும் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இவ்வாறு கோபியின் கேரக்டர் அதிக அளவு தமிழ் மக்களிடையே ரீச் ஆகியுள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது பாக்கியலட்சுமி தொடர் கதாபாத்திரங்களுக்கு ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதில் பாக்கியலட்சுமியான சுசித்ரா அவர்களுக்கு ஒரு நாள் 15000 ரூபாயும், கோபியாக வரும் சதீஷ் அவர்களுக்கு ஒரு நாள் 12,000 ரூபாயும், ராதிகா அவர்களுக்கு 12,000 ரூபாயும், ஜெனி, செழியன் மற்றும் எழில் அவர்களுக்கு ஒரு நாள் 10,000 ரூபாயும், இனியாவுக்கு 8,000 ரூபாயும் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!