பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!

0
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சதிஷ் குறித்தான பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கோபி இத்தனை திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறாரா என ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி கோபி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மக்களின் மத்தியில் விரைவில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் கோபி. கோபியின் கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக வேறு எந்த நடிகராவது நடித்திருந்தால் கூட பாக்கியலட்சுமி சீரியல் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே.

ExamsDaily Mobile App Download

தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் குறித்தான பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. மின்சார பூவே என்கிற திரைப்படத்தின் மூலமாகவே சதிஷ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியிருக்கிறார். மின்சார பூவே திரைப்படத்தினை தொடர்ந்து ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு, எம்.ஜி.ஆர் ன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் முதலான வரலாற்று திரைப்படங்களில் நடித்தார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் கோபியை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகியது.

அரங்கேறும் எழில் & அமிர்தாவின் திருமண வைபோகம் – பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்பம்!

இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை தொடர்ந்து இருமுகன் மற்றும் தனி ஒருவன் ஆகிய திரைப்படங்களில் கோபி குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்பட வெற்றிக்கு பிறகு தான் கோபிக்கு சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மந்திரவாசல் சீரியல் மூலமாக அறிமுகமான சதிஷ் அடுத்தடுத்து சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி முதலான சீரியல்களில் நடித்தார். ஆனால், இந்த சீரியல்கள் கோபிக்கு நினைத்த அளவு ரீச்சை கொடுக்கவில்லை. இதற்கு பிறகு தான் கோபிக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரால் தான் பாக்கியலட்சுமி சீரியலும் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!