விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலை பலரும் கோபியின் நடிப்புக்காக தான் பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது கோபி குறித்தான பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஏகப்பட்ட திரைப்படங்களில் கோபி நடித்துள்ள விஷயம் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

பாக்கியலட்சுமி கோபி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் விரைவில் மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டனர். அந்த வகையில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது கண்டிப்பாக பாக்கியலட்சுமி கோபி தான். என்னதான் பாக்கியாவை ஏமாற்றி கொண்டிருந்தாலும் கோபியின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்படுபவையாக இருக்கிறது.

முதல்முறையாக ரசிகர்களுக்காக அர்ஷ்ஷின் முகத்தை காட்டிய ஆலியா – வைரலாகும் வீடியோ!

பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பதற்கு கோபியும் ஒரு வகையில் காரணம் தான். கோபிக்கு பதிலாக வேறு எவராவது நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே. தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சதிஷ் குறித்தான பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது கோபி மின்சார பூவே என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயனாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மற்றும் எம்.ஜி.ஆர் ன் வாழ்க்கை வரலாறு போன்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்தார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் கோபிக்கு மிக பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. இதற்கு பிறகு தான் சீரியலில் கோபி அறிமுகமானார். அதாவது மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி என ஏகப்பட்ட சீரியல்களிலும் நடித்தார். இதனை தொடர்ந்து இருமுகன் மற்றும் தனிஒருவன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இதற்கு பிறகு தான் கோபிக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!