குடி போதையில் தன் மனைவி பாக்கியா என்ற உண்மையை உளரும் கோபி – ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன?

0
குடி போதையில் தன் மனைவி பாக்கியா என்ற உண்மையை உளரும் கோபி - ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன?
குடி போதையில் தன் மனைவி பாக்கியா என்ற உண்மையை உளரும் கோபி - ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன?
குடி போதையில் தன் மனைவி பாக்கியா என்ற உண்மையை உளரும் கோபி – ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன?

விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில், குடிபோதையில் ராதிகா வீட்டுக்கு வரும் கோபி பாக்கியா தான் தன்னுடைய மனைவி என்ற உண்மையை உளறி விடும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதற்கு பிறகு ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

கிட்டத்தட்ட 300 எபிசோடுகளுக்கும் மேலாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த அந்த நிகழ்வு இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் எபிசோடுகளில் இடம்பிடிக்க இருக்கிறது. இந்த தொடரில் இதுவரை பாக்கியா தான் தன்னுடைய மனைவி என்பதை மறைத்து காதலி ராதிகாவுடன் பழகி வருகிறார் கோபி. இது தவிர குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்களிலும் மண் தூவி விட்டு பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறார் அவர். இந்த கதை இப்படியே நீண்டால் எப்போது தான் உண்மை தெரிய வரும் என்று ரசிகர்கள் குழம்பி போயிருந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில், இந்த சீரியல் திடீர் திருப்பமாக கோபி, தனது மனைவி பாக்கியா குறித்த உண்மையை ராதிகாவிடம் உளறி வைப்பது போன்ற ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது மூர்த்தி மற்றும் தனம் இருவரும் கோபி பற்றிய உண்மையை ராதிகாவிடம் சொல்லி விட்டு வர ராதிகாவுக்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. அதனால், கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று ராதிகா சொல்ல, தன் குட்டு வெளிப்பட்டு வருமோ என்ற பயத்தில் ராதிகாவை கூட்டி செல்ல மறுக்கிறார் கோபி. இப்போது கோபியின் நடத்தை மீது சந்தேகப்படும் ராதிகா அவரை வெளியே விரட்டி விடுகிறார்.

இந்த துக்கத்தில் மது அருந்தும் கோபி இப்போது ராதிகாவை சந்திக்க வருகிறார். இது குறித்து வெளியான ப்ரோமோவில் கோபி போதையில் குடித்துவிட்டு வர, எதற்காக குடித்து விட்டு இங்க வந்து ட்ராமா பண்ணிட்டு இருக்கீங்க. உங்க குடும்பத்தை பாக்கனும்னு சொன்னேன். அது உங்களால செய்ய முடியல என்று ராதிகா கோபப்படுகிறார். இப்போது ராதிகாவின் வார்த்தையை கேட்டு உணர்ச்சிவசப்படும் கோபி, இப்போ என்ன என் குடும்பத்தை பாக்கணும், அவ்வளோ தானே என்று சொல்லி விட்டு பாக்கியாவுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காட்டுகிறார்.

குடித்துவிட்டு ராதிகா வீட்டில் கலாட்டா செய்யும் கோபி, கோவப்பட்ட ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இது தான் உன்னோட பெஸ்ட் ப்ரண்ட் பாக்கியா, என்னுடைய மனைவி என்று கூறுகிறார். இந்த உண்மையை அறிந்து கொள்ளும் ராதிகா அதிர்ச்சியாகிறார். இப்போது, கோபியின் அனைத்து நாடகங்களையும் அறிந்து கொள்ளும் ராதிகா அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பேராவலை உண்டாக்கி இருக்கிறது. இது தவிர நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வைத்த கோபியின் தில்லாலங்கடி வேலை இப்போது ராதிகாவுக்கு தெரிய வந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here