வீட்டு செலவுகளால் திணறும் பாக்கியா.. சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன? “பாக்கியலட்சுமி” அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும், கோபிக்கும் வேலை இல்லாமல் இருப்பதால் வீட்டு செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிற்கு வேலை போனதால் பயங்கர பண கஷ்டம் வருகிறது. இந்நிலையில் ஜெனி வீட்டை விட்டு போனதால் ஈஸ்வரி பாக்கியாவிற்கு வில்லியாக மாறிவிடுகிறார். மறுபக்கம் கோபி பிசினஸ் நஷ்டம் அடைய அவர் சம்பாரிக்காமல் பாக்கியா காசில் சாப்பிட நினைக்கிறார். அவர் கிரெடிட் கார்டு பில் கூட காட்டாமல் இருக்க அவருடைய காரை ஜப்தி செய்ய ஆட்கள் வருகின்றனர்.
தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – நிம்மதியில் மக்கள்!
அப்போது ஈஸ்வரி என் மகன் காரை எடுக்க கூடாது என சொல்ல, உங்க மகன் காசு கட்டவில்லை என அவர்கள் உண்மையை சொல்கின்றனர். குடும்பத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் இருக்க, அதை எல்லாம் பாக்கியா எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பாக்கியாவிற்கு துணையாக ராதிகா இருக்க கோபி நிலைமை என்ன ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.