
அப்பா போலவே ஜெனிக்கு துரோகம் செய்யும் செழியன்.. பாக்கியா செய்ய போவது என்ன? – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவை ஏமாற்றியது போல செழியனும் ஜெனியை ஏமாற்ற இருப்பது இனி வரும் திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், கோபி 25 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்துள்ள நிலையில், கோபி பாக்கியாவை சந்தேகப்பட தொடங்கி விட்டார். ஆனால் பாக்கியாவை சொன்னதும் செழியனிற்கு கோவம் வர உடனே அப்பாவை அடிக்க செல்கிறார். செழியனின் இந்த மாற்றம் ஜெனிக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அதனால் அவருடன் இதுவரை இருந்ததை விட அன்பாக இருக்கிறார்.
ஆனால் செழியன் ஜெனிக்கு தெரியாமல் அப்பாவை போலவே வேறு பெண்ணுடன் பேசுகிறார். ஏற்கனவே இது பற்றி ஜெனி கேட்க, வேலை விஷயமாக பேசுவதாக சொல்கிறார். ஜெனி கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் செழியன் ஜெனியை ஏமாற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் குடும்பத்தில் பிரச்சனை வரும்போது கோபி செழியனுக்கு சப்போர்ட் செய்ய, ஜெனி-செழியன் பிரியாமல் பாக்கியா பல முயற்சிகளை செய்கிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download