
தேர்தலில் மோதிக்கொள்ளும் பாக்கியா, ராதிகா.. ஜெயிக்க போவது யார்? விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா செகரட்டரி தேர்தலில் நிற்க இருக்கும் நிலையில், அவருக்கு போட்டியாக கோபி ராதிகாவை தேர்தலில் நிற்க சொல்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. தினமும் பாக்கியா வாழ்க்கையில் கோபியால் பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஏரியா செகரட்டரி தேர்தலில் பாக்கியா நிற்பதாக கோபியிடம் சவால் விடுகிறார். அதற்கு கோபி நக்கலடித்து சிரிக்க, உடனே ராமமூர்த்தி கோபியிடம் நீ தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என சவால் விடுகிறார்.
Exams Daily Mobile App Download
உடனே கோபி இந்த தேர்தலில் பெண்கள் தான் நிற்க வேண்டும் என்பதால், ராதிகா தேர்தலில் பாக்கியாவிற்கு எதிராக நிற்பார் என சொல்கிறார். அதற்கு ராதிகா மறுப்பு தெரிவிக்க, ஆனால் கோபி கண்டிப்பாக ராதிகா தேர்தலில் நிற்க வேண்டும் என உறுதியாக சொல்கிறார். ஆனால் ஏரியா பெண்கள் அனைவரும் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு பின் சன் டிவி “இனியா” சீரியலில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடி – வைரல் அப்டேட்!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் ஆண்கள் கோபிக்கு ஆதரவாக இருப்பதால் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அந்த போட்டியில் பாக்கியா ராதிகாவை தோற்கடிப்பார் என்பது உறுதியாக தெரிகிறது. மேலும் கதையில் எப்படி எல்லாம் ட்விஸ்ட் வைத்து கொண்டு செல்ல போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.