கோபியின் கல்யாணத்துக்கு எதிராக நிற்கும் இனியா? கோபியின் முடிவு என்ன – பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!

0
கோபியின் கல்யாணத்துக்கு எதிராக நிற்கும் இனியா? கோபியின் முடிவு என்ன - பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!
கோபியின் கல்யாணத்துக்கு எதிராக நிற்கும் இனியா? கோபியின் முடிவு என்ன - பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!
கோபியின் கல்யாணத்துக்கு எதிராக நிற்கும் இனியா? கோபியின் முடிவு என்ன – பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த கட்டமாக கோபியும், ராதிகாவும் கல்யாணம் பண்ணிக்க போற முடிவுல இருக்காங்க. இந்த நிலையில் அடுத்தடுத்து புது புது ட்விஸ்ட் எல்லாம் சீரியலில் அப்டேட் ஆக இருக்கிறது. மேலும் ரசிகர்களுக்கு வரபோற எபிஸோட்ஸ் எதிர்பார்க்காத அளவில் இருக்கும் என தகவல் வெளியாகி வருகிறது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒரு வழியாக பாக்கியாவும்,கோபியும் பிரிஞ்சுட்டாங்க. இதுக்கு அப்புறம் பாக்கியா தனியா நின்னு கோபிய எதிர்க்கிற மாதிரி கதைப்போகும் அப்படினு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மொத்தமா கதையே மாறிடுச்சு. இவ்வளவு நாள் கோபியை வேணாம்னு சொன்ன ராதிகா, இப்போ கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காங்க. இன்னொரு பக்கம் கோபி அவங்க அம்மாகிட்ட ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறத பத்தி சொல்றாரு.

இத கேட்ட ஈஸ்வரி அம்மா சரிங்கிற மாதிரி பதில் சொல்லிட்டு போறாங்க. இதுனால குஷி ஆன கோபி பாக்கியாவை வெறுப்பேத்த கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண போற மாதிரி கதை வர இருக்கிறது. . இதுக்கு அப்புறம் ராதிகாவோட முதல் கணவர் ராஜேஷ் கல்யாணத்துல பெரிய பிரச்சனை பண்ணுவாருனு தகவல் வெளியாகி வருகிறது. இப்படி அடுத்தடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வர இருக்கிறது. ஒரு வழியா கல்யாணம் நடக்க போகுதுனு சந்தோசமா இருக்க கோபிக்கு மகள் இனியா மூலம் பெரிய இடியே விழுகுது. அதாவது, இனியாவும், ராதிகாவோட பொண்ணு மயூவும் சண்டை போட்டுகிறாங்க. மயூ வந்து கோபி தான் எங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்க போறாங்க அப்படினு இனியாகிட்ட சொல்ராங்க. இத கேட்ட இனியா இல்ல கோபி என்னோட டாடின்னு சொல்லி சண்டை போடுறாங்க.

ஆப்கானிஸ்தானில் பள்ளி அருகே குண்டு வெடிப்பு – 4 மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு!

இன்னொரு பக்கம் இனியா கோபிகிட்ட நேரா வந்து ஏன் டாடி இப்படி பண்ணுணிங்க, இனிமே நான் உங்க பொண்ணு இல்லையா, மயூ தான் உங்க பொண்ணா அப்படிங்கிற மாதிரி பேசுறாங்க. உடனே கோபி இனியாவை அப்படிலாம் இல்ல இனியானு சொல்லி சமாதானப்படுத்த முயற்சி பன்றாரு. ஆனா இனியா அதப்பத்தி கேக்காம போயிருறாங்க. இதுக்கு அப்புறம் மயூவை வெளியில் பாக்கும் கோபி என்ன இங்க நிக்கிற அப்படினு கேக்குறாரு. உடனே மயூ நீங்க தான எங்க அம்மாவா கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னிங்கனு கேக்குறாங்க. இதற்கு ஆமான்னு கோபி பதில் சொல்ல, இந்த பக்கம் இனியா கார்குள்ள இருந்து வெளியே வராங்க. இத பாத்த உடனே கோபிக்கு அதிர்ச்சியாகிடுது. இனியா என்ன டாடி நீங்கதானே நான் கல்யாணம் பண்ணிக்கலன்னு சொன்னிங்க, இப்போ மயூகிட்ட இப்படி சொல்றிங்கன்னு கோபப்படுறாங்க. இவங்க ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்கிறதுன்னு முழிக்கிறாரு கோபி. இதே மாதிரி இன்னும் நிறைய ட்விஸ்ட் பாக்கியலட்சுமி சீரியலில் வர இருக்கிறது .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here