திருமணத்திற்கு சமைக்க வந்த பாக்கியா, கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி ராதிகா – இன்றைய எபிசோட்!

0
திருமணத்திற்கு சமைக்க வந்த பாக்கியா, கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி ராதிகா - இன்றைய எபிசோட்!
திருமணத்திற்கு சமைக்க வந்த பாக்கியா, கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி ராதிகா - இன்றைய எபிசோட்!
திருமணத்திற்கு சமைக்க வந்த பாக்கியா, கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் ஜெனியும் செல்வியும் சமையல் ஆர்டரை நல்லபடியாக செய்து முடிக்க வேண்டும் என நினைத்து கிளம்பி மண்டபத்திற்கு செல்கின்றனர். பின் கோபியும் ராதிகாவும் கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஜெனி செல்வி என மூவரும் ஒரே வண்டியில் கிளம்பி செல்ல, ஜெனி செல்வியை சரியாக வண்டியை ஓட்ட சொல்கிறார். ஆனால் செல்வி எனக்கே முடியாமல் இருக்கிறது. மூன்று பேரையும் வைத்து கஷ்டப்பட்டு வண்டி ஓட்டுகிறேன் என சொல்கிறார். அப்போது போக்குவரத்து காவலர் வண்டியை நிறுத்துகிறார். எப்படி ரூல்ஸ் மீறி வண்டியில் மூவர் வரீங்க என போலீசார் அபராதம் கட்ட சொல்கிறார். உடனே பாக்கியா இது என் மருமகள் அவள் திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டாள், அவளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறோம் என சொல்கிறார்.

பாக்கியா கண்ணை காட்ட ஜெனி மயக்கம் வருவது போல நடிக்கிறார். அவரை பார்த்ததும் போலீசார் நம்பாமல் இருக்க, பாக்கியா உண்மையாவே மருத்துவமனை போவதாக சொல்லி சமாளிக்கிறார். பின் போலீசார் அவர்களை விட்டுவிடுகிறார். ஜெனி பாக்கியாவிடம் ஒரு கான்டராக்டர் ஆக எல்லா தகுதியும் இருப்பதாக சொல்கிறார். பின் செல்வி மட்டும் வண்டியில் வர பாக்கியாவும், ஜெனியும் ஆட்டோவில் மண்டபம் வருகின்றனர். அங்கே வாட்ச்மேன் இவர்களை உள்ளே விடாமல் தடுக்க பாக்கியா நாங்க சமைக்க வந்திருக்கோம் மேனேஜரிடம் ஏற்கனவே பேசியாச்சு என சொல்கிறார்.

பின் மேனேஜரை சந்தித்து பேச அவர் பாக்கியா மீது நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார். ஆனால் பாக்கியா நான் சரியாக செய்து முடிப்பேன் என நம்பிக்கையுடன் இருக்கிறார். மண்டபத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. பாக்கியா செல்வி ஜெனி சமையல் வேலைகளை தொடங்க, அப்போது ஜெனிக்கு செழியன் போன் செய்து உடனே வீட்டிற்கு வர சொல்கிறார். ஜெனி போகமாட்டேன் என சொல்ல ஆனால் பாக்கியா அவரை கிளம்ப சொல்கிறார். செல்வி ஜெனியை ஆட்டோ ஏற்றிவிட வர சொல்ல, அப்போது வெளியே சந்துரு நிற்கிறார். இவரை எங்கையோ பார்த்தது போல இருப்பதாக செல்வி சொல்ல, எங்கே என தெரியவில்லை என சொல்கிறார்.

பின் செல்வி ஜெனியை ஆட்டோ ஏற்றி விட அப்போது கல்யாண மாப்பிள்ளை பெண் பெயர் பலகை கொண்டு வருகின்றனர். ஆனால் ஜெனி அதை பார்க்காமல் கிளம்பி செல்கிறார். மறுபக்கம் திருமணத்திற்கு ராதிகாவும் அம்மாவும் கிளம்பி இருக்க கோபியை எதிர் பார்த்து இருக்கின்றனர். சந்துரு கோபி எங்கே என கேட்க, அவருடைய அப்பா திடீரென போன் செய்து வர சொன்னதாக சொல்கிறார். விடிந்தால் கல்யாணம் அவருடைய அப்பா பிரச்சனை செய்தால் என்ன ஆகும் என கேட்க ராதிகா எதுவும் ஆகாது என சொல்கிறார்.

5G இணைய சேவையில் இப்படி ஒரு பிளான் இருக்கா – இரண்டே ஆண்டுகளில் மாறப்போகும் இந்தியா!

அப்போது கோபி வர எதுவும் பிரச்சனை இல்லை பேசி சமாளித்துவிட்டேன் என சொல்லி கிளம்ப சொல்கிறார். யார் வந்தாலும் இந்த கல்யாணம் நடக்கும் என கோபி சொல்கிறார். ராதிகா அம்மா உடனே மண்டபம் போவோம் அவர் எப்படியும் இங்கே தான் வருவார் என சொல்ல, அனைவரும் கிளம்புகின்றனர். தாத்தா நான் உயிரோடு இருக்கும் வரை கல்யாணம் நடக்காது என வேகமாக நடந்து வருகிறார். பின் செல்வி மணமக்கள் பெயர் பலகையை பார்க்க அதில் ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி படிப்பது என கஷ்டப்பட்டு கோபிநாத் என செல்வி பெயரை படிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!