கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் ராதிகா, ரிசப்ஷன் வேலைகளை தொடங்கிய பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் ராதிகா, ரிசப்ஷன் வேலைகளை தொடங்கிய பாக்கியா - இன்றைய எபிசோட்!
கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் ராதிகா, ரிசப்ஷன் வேலைகளை தொடங்கிய பாக்கியா - இன்றைய எபிசோட்!
கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் ராதிகா, ரிசப்ஷன் வேலைகளை தொடங்கிய பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் பாக்கியாவிடம் ப்ரொடியூசர் படம் பண்ண சம்மதித்தது பற்றி சொல்கிறார். பின் கல்யாணத்தை நினைத்து ராதிகா பதட்டமாக இருக்க ஆனால் கோபி திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்கிறார். மறுபக்கம் பாக்கியா ஜெனி ரிசப்ஷன் வேலைகளை செய்ய கிளம்புகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் நேரமாகி வீட்டிற்கு வராமல் இருப்பதால் பாக்கியா அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நேரமாகியும் என்ன செய்கிறான் என பாக்கியா கோவமாக இருக்க அப்போது எழில் சந்தோசமாக வருகிறார். பாக்கியா எழில் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்த்து என்ன ஆச்சு என கேட்க எழில் படம் பண்ண ப்ரொடியூசர் சம்மதித்ததாக சொல்கிறார். உடனே பாக்கியா நினைத்ததை சாதித்து விட்டாய் என சொல்லி சந்தோசப்பட, எழிலிற்கு சாப்பாடு பரிமாறுகிறார்.

அப்போது பாக்கியா அமைதியாக இருக்க எழில் என்ன ஆச்சு என கேட்க பாக்கியா கோபி உடன் வந்த கனவை பற்றி பேசுகிறார். கனவு எல்லாம் சொல்லிவிட்டா வருகிறது என பாக்கியா சொல்ல, எழில் எனக்கு உன் நிலைமை புரிகிறது என சொல்கிறார். பின் பாக்கியா நாளைக்கு ரிசப்ஷன் வேலை இருப்பதாக சொல்ல, இந்த ஆர்டர் முடியும் வரை நீ தான் இந்த வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்க, எழில் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் எழில் மாடிக்கு வந்து அமிர்தாவிற்கு போன் செய்கிறார். அமிர்தாவிடம் சந்தோசமாக பேச படம் வேலைகளை தொடங்க சொல்லிவிட்டதாக சொல்கிறார்.

ப்ரொடியூசர் கதையை மாற்ற வேண்டாம் என சொன்னதாக சொல்ல, அமிர்தா எப்படியோ நினைத்ததை சாதித்துவிட்டீர்கள் என சொல்கிறார். பின் ப்ரொடியூசர் மகள் வர்ஷினி தான் எனக்கு சப்போர்ட் செய்து படத்தை தொடர்ந்து எடுக்க உதவி செய்ததாக சொல்கிறார். பின் எழில் போனை வைக்க அமிர்தா, அவருடைய அப்பா சொன்னதை நினைத்து பார்க்கிறார். வர்ஷினி உடன் போனதை பற்றி ஏன் சொல்லாமல் இருக்கிறார் என நினைக்க, அப்போது எழில் மீண்டும் போன் செய்கிறார். அமிர்தாவிடம் உங்க வீட்டு பக்கமாக தான் வந்தோம் என சொல்ல, வந்தோம் என்றால் யாரெல்லாம் என அமிர்தா கேட்கிறார்.

அப்போது எழில் நானும் வர்ஷினியும் வந்தோம் என சொல்கிறார். அமிர்தா எழில் உண்மையாக இருப்பதை நினைத்து சந்தோசப்படுகிறார். மறுபக்கம் ராதிகாவின் அம்மா கல்யாண வேலைகளை பற்றி கேட்க சந்துரு நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். ராதிகா எல்லாம் நல்லபடியாக நடக்குமா என பதட்டமாக இருக்க நான் இருக்கிறேன் என சொல்கிறார் சந்துரு. அப்போது கோபி வர எல்லாம் தயாராக இருக்கிறதா என கேட்கிறார். சந்துரு எல்லாம் இருக்கிறது என சொல்ல, ராதிகாவின் அம்மா உங்க வீட்டிற்கு தகவல் சொன்னீங்களா என கேட்கிறார். அம்மாவிடம் சொன்னேன் என கோபி சொல்ல, அவங்க வந்து பிரச்சனை செய்ய போறாங்க என ராதிகாவின் அம்மா சொல்கிறார்.

தமிழகத்தில் உயரும் வீட்டு வாடகை – பொதுமக்கள் அதிர்ச்சி! என்ன இவ்வளவா?

யார் வந்தாலும் என் முடிவு மாறாது என கோபி சொல்ல, சந்துரு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா எல்லாருக்கும் சாப்பாடு செய்து வைத்துவிட்டு ரிசப்ஷன் வேலைகளை பார்க்க செல்கிறார். அவர் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியிடம் சொல்லிவிட்டு கிளம்ப அப்போது ஜெனியும் வருகிறார். ஆனால் செழியன் ஜெனியை போக வேண்டாம் என சொல்ல, ஜெனி நானும் உங்களுடன் வருவேன் என சொல்கிறார். பின் செல்வி பாக்கியா ஜெனி கிளம்பி செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!