கோபி கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் தாத்தா ஈஸ்வரி, வர்ஷினி உடன் எழிலை பார்த்த அமிர்தா அப்பா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபி கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் தாத்தா ஈஸ்வரி, வர்ஷினி உடன் எழிலை பார்த்த அமிர்தா அப்பா - இன்றைய
கோபி கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் தாத்தா ஈஸ்வரி, வர்ஷினி உடன் எழிலை பார்த்த அமிர்தா அப்பா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!கோபி கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் தாத்தா ஈஸ்வரி, வர்ஷினி உடன் எழிலை பார்த்த அமிர்தா அப்பா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபி கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் தாத்தா ஈஸ்வரி, வர்ஷினி உடன் எழிலை பார்த்த அமிர்தா அப்பா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி இனியா ராதிகா வீட்டிற்கு போனதற்கு பாக்கியாவை காரணமாக சொல்கிறார். பின் ராமமூர்த்தி ஈஸ்வரி சேர்ந்து திருமணம் நடக்க கூடாது என முடிவு செய்கின்றனர். மறுபக்கம் எழில் வர்ஷினி உடன் பைக்கில் செல்ல அதை அமிர்தாவின் அப்பா பார்த்துவிடுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி இனியாவை ராதிகா வீட்டிற்கு ஏன் போனாய் என கேட்கிறார். உடனே இனியா டாடி தான் கூட்டிக் கொண்டு சென்றார். எனக்கு போக இஷ்டம் இல்லை அங்கே நான் யாருடனும் பேசவே இல்லை என சொல்கிறார். உடனே ஈஸ்வரி பாக்கியா இப்படி நடக்க நீ தான் காரணம் என சொல்கிறார். இன்னைக்கு புள்ளையை கூட்டிக் கொண்டு சென்று இப்போது கூட்டி வந்து விடுகிறான். நாளைக்கு அப்படியே கூட்டிக் கொண்டு சென்றால் என்ன செய்வது என கேட்கிறார். எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என சொல்ல தாத்தாவும், ஜெனியும் அங்கிள் செய்த தவறுக்கு ஆன்டியை ஏன் திட்டுறீங்க என கேட்கிறார்.

பின் ஈஸ்வரி இவள் அவனை கைக்குள் போட்டு வைத்திருந்தால் எல்லாம் சரியாகி இருக்கும் என சொல்ல, உடனே பாக்கியா நான் உங்க புள்ளையை வெளியே போக சொல்லவில்லை. எல்லாத்துக்கும் என்னால் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டப்படி அவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்ல, உடனே கோவப்பட்ட செழியன் என்ன சொன்ன அப்பாக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லையா சரி எங்களுக்கும் அப்பாவிற்கும் சம்மந்தம் இருக்கிறதா என கேட்க தாத்தா கோவப்பட்டு தேவை இல்லாமல் பேசாதே என சத்தம் போடுகிறார்.

மறுபக்கம் எழில் வர்ஷினியை அழைத்து கொண்டு செல்ல, வர்ஷினி வழி சொல்லி கொண்டே வருகிறார். வர்ஷினிக்கு எழில் மீது ஆசை வர அவருடன் நெருக்கமாக இருக்கிறார். பின் வர்ஷினி அமிர்தா பற்றி கேட்க எழில் எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் என சொல்கிறார். பின் வர்ஷினி ஒன்றும் பேசாமல் இருக்க எழில் எனக்கு குடும்பம் தான் பிடிக்கும் அதுவும் அம்மா தான் பிடிக்கும் என சொல்கிறார். எழில் வர்ஷினியை அழைத்து கொண்டு செல்ல அப்போது அமிர்தாவின் அப்பா அதை பார்த்துவிடுகிறார். அது எழில் மாதிரி இருப்பதாக நினைத்து அதிர்ச்சி அடைகிறார்.

பின் ஈஸ்வரியும் தாத்தாவும் கோபியை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அவன் இனியாவை ராதிகா வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போயிருக்கான் ட்ரெஸ் வாங்கி கொடுத்து இருக்கிறான். விட்டால் கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போவான் போல, அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் கல்யாணம் செய்ய போகிறேன் என சொல்வான் என கேட்க, அவன் வேண்டும் என்றே தான் இப்படி செய்து இருக்கிறான் என தாத்தா சொல்கிறார். இந்த கல்யாணம் நடந்தால் இனியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். நீங்க 3 பேர் தான் அவன் மீது அக்கறையாக இருக்கீங்க அதனால் உங்களை கரெக்ட் செய்ய நினைக்கிறான் என தாத்தா சொல்ல, இதுக்கு முடிவு கட்டுகிறேன் என தாத்தா சொல்கிறார்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் உறுதி!

பின் இனியா ரூமில் ஹோம் ஒர்க் செய்ய பாக்கியா தண்ணி கொண்டு வருகிறார். இனியா பாக்கியாவை நினைத்து பாவப்படுகிறார். நான் தப்பு செய்தது எனக்கே தெரியும் என நினைத்து பாக்கியாவிடம் நல்ல முறையில் பேசுகிறார். உனக்கு டாடி உடன் வெளியே சென்றது கோவமா என கேட்க அப்படி எல்லாம் இல்லை என சொல்கிறார். பின் அமிர்தா வீட்டில் எழிலை வேறு பெண்ணுடன் பார்த்தது பற்றி பேசுகின்றனர். இதெல்லாம் சரியாக வருமா என யோசித்து கொள்ள சொல்ல அமிர்தா எழில் அப்படிப்பட்டவர் இல்லை என சொல்கிறார். அமிர்தாவை எச்சரிக்கை செய்ய அமிர்தா ஒருவேளை உண்மையாக இருக்குமா என சந்தேகப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here