தொழிலில் முன்னேற நினைக்கும் பாக்கியா, ராதிகா எடுத்த உறுதியான முடிவு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
தொழிலில் முன்னேற நினைக்கும் பாக்கியா, ராதிகா எடுத்த உறுதியான முடிவு - இன்றைய
தொழிலில் முன்னேற நினைக்கும் பாக்கியா, ராதிகா எடுத்த உறுதியான முடிவு - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!தொழிலில் முன்னேற நினைக்கும் பாக்கியா, ராதிகா எடுத்த உறுதியான முடிவு - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
தொழிலில் முன்னேற நினைக்கும் பாக்கியா, ராதிகா எடுத்த உறுதியான முடிவு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவிற்கு போன் செய்து பணம் தான் வாழ தேவை என சொல்ல உடனே பாக்கியா போனை கட் செய்கிறார். பின் தொழிலை மேலும் முன்னேற்ற வேண்டும் என நினைக்கிறார். மறுபக்கம் சந்துரு கோபியை திருமணம் செய்து கொள்ள ராதிகாவிடம் சொல்ல ஆனால் ராதிகா இப்போதைக்கு வேண்டாம் என சொல்கிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பாக்கியாவிற்கு போன் செய்து குடும்பத்தை நடத்த பணம் வேண்டும் என சொல்ல, உன்னால் எதையாவது சார்ந்து ஒட்டிக் கொண்டு தான் வாழ முடியும் என சொல்ல உடனே பாக்கியா போனை கட் செய்கிறார். பின் ஜெனி போனில் யாரு என கேட்க, தேவை இல்லாத போன் ஆனால் இந்த போன் தான் வாழ்க்கையில் எங்கே இருந்தோம் என்பதை புரிய வைக்கிறது என சொல்கிறார். என்ன அக்கா சொல்கிறாய் என செல்வி கேட்க அதை விடு இன்னும் மசாலா பொடி வைத்து குடும்பத்தை நடத்த முடியாது பெரிதாக எதாவது செய்ய வேண்டும் என சொல்ல, என்ன செய்ய போகிறாய் என செல்வி கேட்கிறார். அதை பற்றி இன்னும் யோசிக்கவில்லை என பாக்கியா சொல்கிறார். நாம நன்றாக வருவோம் என நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்.

இது ஒன்றும் நமக்கு புதிது இல்லையே சிறிதாக செய்ததை பெரிதாக செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் ஜெனி சரியாக சொன்னீங்க ஆண்டி ஆனால் இனிமேல் நகையை அடகு வைக்க கூடாது என சொல்கிறார். நாம சாதாரண குடும்பம் தான நகை எல்லாம் தேவை இல்லை என சொல்கிறார். செல்வி அதான் பணம் தேவையில்லையே நகையை வாங்கி கொண்டு வரவா என கேட்க, வேண்டாம் நமக்கு சில வேலை இருப்பதாக பாக்கியா சொல்கிறார். பின் தாத்தா வந்து பணம் கட்டியாச்சா என கேட்க பாக்கியா எதுவும் பேசாமல் இருக்கிறார். அப்போது இனியா வர இனியாவிடம் பீஸ் கட்டியாச்சா என பாட்டி கேட்கிறார். பின் பாக்கியாவிடம் இது பற்றி சொன்னால் என்ன என கேட்க, அவங்க கட்டவில்லை டாடி தான் கட்டியதாக இனியா சொல்கிறார். பின் ஈஸ்வரி இது தான் உன் அப்பா கோபி என பெருமையாக சொல்கிறார்

பாத்தியா பாக்கியா என்ன தான் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் அவன் தான் பீஸ் கட்டி இருக்கான். கோபி எப்போதும் இந்த குடும்பத்திற்கு நல்லது தான் நினைப்பான். நான் சொல்வதை நீ கேட்கவில்லை என ஈஸ்வரி சொல்கிறார். இன்னும் எல்லாத்தையும் எப்படி சமாளிக்க போறியோ என கேட்க தாத்தா பணம் இல்லை என்றால் என்னிடம் கேட்டு இருக்கலாம் என சொல்கிறார். பின் பாக்கியா பணம் இருந்தது என சொல்ல இனிமேல் இது போல நடக்காமல் பார்த்துக் கொள் என சொல்கிறார். பின் ஜெனி அவர் தவறு செய்தது எல்லாம் மறந்துவிட்டு பாட்டி எப்படி பேசுறாங்க பாருங்க என சொல்ல, பாதிக்கப்பட்டது நீ ஆனால் உனக்கே சொல்லி கொடுக்கிறார்கள் என செல்வி சொல்கிறார்.

தமிழகத்தில் வருகிற 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணாதீங்க!

இதை பற்றி நாம கவலைப்படாமல் பெரிதாக சாதிக்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார். செல்வி, பெரிதாக செய்ய வேண்டும் என சொல்கிறாய்? ஆனால் என்ன என தெரியவில்லை என சொல்ல, பாக்கியா அது பற்றி யோசித்து சொல்கிறேன் என சொல்கிறார். மறுபக்கம் எழில், ப்ரொடியூசர் பற்றி அவருடைய நண்பர் சரி இல்லை என சொல்கிறார். அவர் வேண்டும் என்றே செய்வதாக அவர் சொல்கிறார். பின் ப்ரொடியூசர் சதீஷிடம் என்ன சொல்கிறார் உங்க இயக்குனர் படம் செய்கிறாரா என கேட்க அதெல்லாம் பண்ணுவான் என சதீஸ் சொல்கிறார். ஓ அப்படியா யாரு ப்ரொடியூசர் என அவர் கேட்க எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். நீங்க கதையை மாற்றாமல் இருந்தால் நான் படம் செய்யமாட்டேன் என ப்ரொடியூசர் மீண்டும் சொல்கிறார்.

எழில் இந்த படத்திற்காக இவ்வளவு உழைத்து இருக்கிறோம், அதனால் இந்த நேரத்தில் அவர் சொல்வதை கேட்க தான் வேண்டும் என சதீஸ் சொல்ல அவரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என எழில் சொல்கிறார். பின் மயூரா அம்மா எங்கே என பாட்டியிடம் கேட்க அம்மா வந்துவிடுவார் என பாட்டி சொல்கிறார். அப்போது ராதிகா வர ஸ்கூலில் மீண்டும் சேர்ந்து கொள்ள சம்மதம் சொன்னதாக சொல்கிறார். பின் ராதிகாவிடம் ஏன் முகம் சரியில்லாமல் இருப்பதாக கேட்க, கோபியை சந்தித்து பேசியதாக சொல்கிறார். கோபியை பார்த்தால் மிகவும் பாவமாக இருப்பதாக சொல்ல, அவரை பார்த்தால் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருப்பதாக சொல்கிறார்.

உடனே சந்துரு நீ மட்டும் ஏன் குற்ற உணர்ச்சியாக இருக்க வேண்டும் என சொல்ல, அவர் ஏன் ஸ்கூலிற்கு வந்தார் என ராதிகாவின் அம்மா கேட்கிறார். பின் இனியாவிற்கு பீஸ் கட்ட வந்ததாக சொல்ல, இவ்வளவு நடந்தும் இனியாவிற்கு பீஸ் கட்ட வந்திருப்பதாக சொல்கிறார். பின் சந்துரு என்னை கேட்டால் நீ மும்பை போகாமல் இருப்பது நல்லது தான் கோபியின் கஷ்டம் எல்லாம் உனக்கு தெரிகிறது என சொல்கிறார். நீ கோபியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொல்ல, ஆனால் ராதிகா இப்போதைக்கு அதை பற்றி நான் யோசிப்பதாக இல்லை என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!