ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி, மகனே இல்லை என சொன்ன ஈஸ்வரி – இன்றைய ” பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி, மகனே இல்லை என சொன்ன ஈஸ்வரி - இன்றைய
ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி, மகனே இல்லை என சொன்ன ஈஸ்வரி - இன்றைய " பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி, மகனே இல்லை என சொன்ன ஈஸ்வரி – இன்றைய ” பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்ட ஈஸ்வரியும் இனியாவும் வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். கோபியை கண்டபடி திட்டிய ஈஸ்வரி, ராதிகாவிற்கும் சாபம் கொடுக்கிறார். பின் பாக்கியாவின் நிலைமையை புரிந்து கொண்டு ஈஸ்வரி அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்டிவிட, ஈஸ்வரியும் இனியாவும் வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி கோபி என சத்தம் போட, கோபி அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் ஈஸ்வரி என்ன கோபி இதெல்லாம் என கேள்வி கேட்கிறார். அம்மா அதான் அன்னைக்கு சொன்னேன்ல ராதிகாவை கல்யாணம் செய்ய போறேன் என கோபி சொல்ல, இனியா கோபியை பார்த்து அழுகிறார். கோபி இனியா என அருகே செல்ல, ஆனால் ராதிகாவும் மயூராவும் கோபி கையை பிடித்து தடுக்கிறார். ஈஸ்வரி என்ன இனியா இவளை பற்றி நீ யோசித்து இருந்தால் இந்த கல்யாணம் செய்து இருப்பியா என கேட்கிறார்.

உடனே ராதிகாவின் அம்மா உங்க மகன் விவாகரத்து வாங்கிவிட்டு தான் கல்யாணம் செய்கிறார் என்னமோ குடும்பத்தை விட்டு வந்தது போல பேசாதீங்க என சொல்ல, நான் என் மகனுடன் பேசுகிறேன் என சொல்கிறார். பின் ராமமூர்த்தி அங்கே இருக்கும் பொருள்களை எல்லாம் தூக்கி எரிந்து நீ நன்றாக இருக்கமாட்டாய் என சொல்ல, உடனே கோபி நாங்க நன்றாக தான் இருக்க போகிறோம் என சொல்கிறார். ஈஸ்வரி எப்படி நன்றாக இருப்பாய் என கேட்க, இனியா டாடி என்னை ஏமாற்றிவிட்டார். எப்போதும் என்னுடன் இருப்பேன் என சொன்னார் என அழுது கொண்டே சொல்கிறார்.

பின் கோபி இப்போதும் அதான் சொல்கிறேன் டாடி உன்னுடன் இருப்பேன் என சொல்கிறார். பின் ஈஸ்வரி, நீ வீட்டை விட்டு வெளியே சென்றதும் பாக்கியாவை பயங்கரமாக திட்டினேன், ஆனால் பாக்கியா தான் உன்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள் என சொல்கிறார். ராதிகா என்ன இதெல்லாம் என கேட்க, ஈஸ்வரி நீ வாய்யை மூடு என சொல்கிறார். இந்த வயதில் கல்யாணம் தேவையா என கேட்க, அம்மா என கோபி கூப்பிடுகிறார். ஆனால் என்னை அப்படி கூப்பிடாதே என ஈஸ்வரி சொல்கிறார். சந்துரு என்ன மாற்றி மாற்றி வந்து சண்டை போடுறீங்க என கேட்க, ராமமூர்த்தி நீங்க பேசாதீங்க இதெல்லாம் ஒரு குடும்பமா என கேட்கிறார்.

தமிழக காவலர்களுக்கான புதிய செயலி – ஆணையர் அறிவிப்பு! விரைவில் அறிமுகம்!

ராதிகா அதை கேட்டு கோபியை பார்த்து பேச சொல்கிறார். மறுபக்கம் பாக்கியாவிடம் வேலை செய்பவர் சென்று பாக்கியாவை அழைத்து வருகிறார். பாக்கியா வர இனியா அம்மா என அழுது கொண்டே செல்கிறார். அங்கே டாடியை பாரு, மயூராவின் அம்மாவை கல்யாணம் செய்திருக்கிறார் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்கிறார். பின் ஈஸ்வரி, பாக்கியா இவனுக்காக உன்னிடம் நான் கோவப்பட்டது தப்பு, இவன் ஒரு துரோகி, பெற்ற வயிறு எரிந்து சொல்கிறேன். இவங்க யாரும் நன்றாக இருக்கமாட்டார்கள் என சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா கோவப்பட ராதிகா கோவமாக செல்கிறார். கோபி நான் ராதிகாவை விரும்பி தான் கல்யாணம் செய்தேன் அதனால் நான் உங்க பையன் இல்லை என ஆகிவிட முடியுமா என கேட்க, இனியா இனிமேல் எனக்கு அம்மா மட்டும் போதும் என சொல்கிறார்.

இனிமேல் பாக்கியாவிற்கும் என் பேர பிள்ளைகளுக்கும் நாங்க இருப்போம் என சொல்ல, ராதிகாவின் அம்மா அப்போ உங்க மருமகளை ஏன் சமைக்க அனுப்புனீங்க என கேட்கிறார். சமைக்க தான அனுப்பினேன், அடுத்தவ புருஷனை இழுத்து வைத்துக் கொள்ளவில்லை என ஈஸ்வரி சொல்கிறார். உடனே ராதிகாவுக்கு கோவம் வர என்ன கோபி எதுவும் பேசாமல் இருக்கீங்க என கேட்கிறார். ராதிகா அவங்க எல்லாம் பேசுவாங்க என சொல்ல, கோபி பாக்கியாவை இதெல்லாம் உன் வேலை தான என கேட்கிறார். ராமமூர்த்தி நடிக்காதே என சொல்ல, ராமமூர்த்தி ஈஸ்வரி நீ பேசியது போதும் என சொல்கிறார். ஈஸ்வரி பாக்கியா, இனியாவை அழைத்து கொண்டு வர, பாக்கியா நீங்க ஏன் இங்கே வந்தீங்க என கேட்க, நான் வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என சொல்கிறார். பின் ராதிகா கோவமாக இருக்க, கோபி அவரை சமாதானம் செய்கிறார். கோபியுடன் ராதிகா கிளம்ப, ராதிகா மாடியில் இருந்து முறைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!