
ராதிகாவிற்கு உறுதி அளிக்கும் கோபி, கோபிக்கு பதிலடி கொடுத்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவிடம் என்ன நடந்தாலும் உனக்கு நான் துணையாக இருப்பேன் என கோபி சத்தியம் செய்து கொடுக்கிறார். பின் பாக்கியாவை சந்தித்து இனி உன் வாழ்க்கையில் கஷ்டப்பட போகிறாய் என பேச, ஆனால் பாக்கியா உன் கூட வாழாமல் நான் சந்தோசமாக இருக்க போகிறேன் என சொல்கிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவிடம் கோபி பார்த்தாயா எல்லாரும் எப்படி பேசினாலும் நான் உன்னுடன் தான் இருக்கேன் என கோபி நம்பிக்கை கொடுக்கிறார். அப்போது ராதிகாவின் அண்ணி வந்து ஆமாம் அவர் பேசும் நேரம் பார்த்து நீ ரூமிற்குள் வந்துவிட்டாய் என சொல்கிறார். பின் கோபி பேசியதை நீ நிறைய கேட்கவில்லை என சொல்ல, பின் ராதிகா அண்ணி சாப்பாடு கொண்டு வருகிறேன் என சொல்கிறார். ஆனால் ராதிகா வேண்டாம் என சொல்ல, கோபி நீங்க சென்று எடுத்துக் கொண்டு வாருங்கள் என சொல்கிறார். பின் கோபி ராதிகாவிடம் அந்த டீச்சரை பார்த்தியா எப்படி பிளான் பண்ணி பிரச்சனை செய்ய வருகிறாள் அவளை நீ நம்பினாய் என கேட்கிறார்.
மறுப்பக்கம் பாக்கியா எனக்கு இந்த வேலை முக்கியம் என ராமமூர்த்தியிடம் சொல்ல, பின் பெண்கள் வேலைக்கு வருகின்றனர் . அப்போது பாக்கியா ராமமூர்த்தியை இங்கே இருக்க வேண்டாம் என சொல்லி ஆட்டோ ஏற்றிவிட வருகிறார். பாக்கியா இதை பற்றி வீட்டில் சொல்ல வேண்டாம் என சொல்கிறார். ராமமூர்த்தி உன்னை எப்படி நான் விட்டு போவேன் என கேட்க, பாக்கியா நான் வருத்தப்படவில்லை என்னை நம்பி வாய்ப்பு கொடுத்திருக்கும் ராஜசேகர் சாருக்கு நான் சரியாக நடந்து காட்ட வேண்டும் என பாக்கியா சொல்கிறார். பின் ராமமூர்த்தி கிளம்பிவிடுகிறார்.
பின் பாக்கியா உள்ளே வர கோபியும் வருகிறார். அவர் பாக்கியாவை பார்த்து நக்கலாக பேசுகிறார். என்ன தப்பு செய்துவிட்டோம் என வருத்தமாக இருக்கிறதா என கோபி கேட்கிறார். இனி ஒவ்வொரு நாளும் வருத்தப்படுவாய், தகுதி இல்லாத உன்னுடன் 25 வருஷம் வாழ்ந்தேன். என்னை என் குடும்பம் முன்னால் வெளியே அனுப்பி என் அப்பா அம்மாவை பிரித்து வைத்தாய், கோர்ட் ஏறி என்னை விவாகரத்து செய்தாய், என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தினாய் என கேட்க, பாக்கியா நான் கிளம்பலாமா என கேட்கிறார், பின் கோபி எங்கே என் அப்பா என கேட்க பாக்கியா அவரை பார்த்து முறைக்க மட்டும் செய்கிறார். ராதிகா என் மனைவி இன்னும் சிறிது நேரத்தில் என கோபி பேசுகிறார். எனக்கு பிடித்தது போல என் வாழ்க்கையை நான் வாழ போகிறேன் என சொல்ல, பாக்கியா வாழ்த்துக்கள் என சொல்கிறார்.
அரசு பள்ளிகள் CBSE க்கு தரத்திற்கு மாற்றம் – அமைச்சரின் முக்கிய கோரிக்கை!
அவர் சிரித்து கொண்டே பேச அதை ராதிகாவின் அண்ணி பார்த்துவிடுகிறார். பின் கோபி என்ன நக்கலா என கேட்க, உங்க வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள் சொன்னேன் என பாக்கியா சொல்ல, உன் நாடகத்தை எல்லாம் நடத்து என கோபி சொல்கிறார். எனக்கும் நீங்க சம்மந்தம் இல்லாத ஆள் தான் உங்க கல்யாணத்தை பார்த்தால் எனக்கு எதுவும் ஆகாது என பாக்கியா சொல்ல, நன்றாக நாடகம் போடுகிறாய் என கோபி சொல்கிறார். என் கல்யாண வாழ்க்கையில் எனக்கு நடந்த துரோகம் தெரிய வந்ததும் நான் அதில் இருந்து வந்துட்டேன் என பாக்கியா சொல்கிறார். என்னை நம்பி ஆளுங்க இருக்காங்க என பேசிவிட்டு பாக்கியா கிளம்புகிறார். நீங்க என்னை பிடிக்காததை சொல்வது போல இத்தனை வருஷம் நான் சொல்லாமல் இருந்தேன் என பாக்கியா பேசிவிட்டு கிளம்புகிறார்
மறுபக்கம் ராமமூர்த்தி வீட்டிற்கு வர வீட்டில் யாருக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது என நினைக்கிறார். அப்போது ராமமூர்த்தி உள்ளே வர, ஈஸ்வரி சோபாவில் படுத்து இருக்கிறார். ராமமூர்த்தி தண்ணீர் எடுத்து குடிக்க , ஈஸ்வரி பார்த்துவிட்டு என்ன ஆச்சு ஏன் முகமெல்லாம் வேர்த்து இருக்கிறது. கை எல்லாம் நடுக்கமாக இருக்கிறது என கேட்கிறார். ஆனால் ராமமூர்த்தி ஒன்றுமில்லை என சொல்கிறார். ஜெனி வந்து என்ன ஆச்சு என கேட்க ஈஸ்வரி என்னன்னே தெரியவில்லை என சொல்கிறார், ஆனால் தாத்தா ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்