
படுக்க இடம் இல்லாமல் தரையில் தூங்கும் கோபி, கோபியை வம்பிழுத்த எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபிக்கு ராதிகா ஓட்ஸ் செய்து கொடுக்க அவரால் அதை சாப்பிட முடியாமல் இருக்கிறது. பின் எழில் கோபி இடையே ஓட்டப்பந்தயம் நடக்கிறது. அதில் கோபியால் ஓட முடியாமல் இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபிக்கு ராதிகா ஓட்ஸ் செய்து கொடுக்க அதை பிடிக்காமல் கோபி சாப்பிடுகிறார். பின் ராதிகாவிடம் இது தான் இருக்கிறதா பிரியாணி வாசனை வந்ததாக சொல்ல, உடனே ராதிகா அதெல்லாம் இரவு சாப்பிட கூடாது என ராதிகா சொல்கிறார். மயூரா வேற எதையோ சாப்பிட இது என்ன என கோபி கேட்கிறார். இது ராகி உங்களுக்கு வேண்டுமா என மயூரா கேட்க கோபி வேண்டாம் என சொல்கிறார். ராதிகா இது தான் இருக்கிறதா என கோபி கேட்க, இன்னும் எனக்கு நிறைய செய்ய தெரியும் நாளைக்கு செய்து கொடுக்கிறேன் என ராதிகா சொல்கிறார். வேறு வழி இல்லாமல் கோபி அதை சாப்பிடுகிறார்.
ஆனால் அது சாப்பிட்டது போல இல்லாமல் இருக்க கோபி புலம்பிக் கொண்டு இருக்கிறார். ராதிகா வந்து துங்கவில்லையா என கேட்க, கோபி இல்லை எனக்கு சிறிய வேலை இருப்பதாக சொல்கிறார். மயூரா தூங்கிவிட்டாளா என கேட்க ஆமாம் என ராதிகா சொல்கிறார். பின் ராதிகாவை அருகில் வந்து அமர சொல்ல ஆனால் ராதிகா வரவில்லை. உடனே கோபி காதல் திருமணம் செய்து ஒரு காதல் கூட இருப்பதில்லை என புலம்புகிறார் . பின் ராதிகாவை ரூமில் பார்க்க ஆசையாக செல்கிறார். ஆனால் ராதிகா அதற்கு முன்னதாக தூங்கிவிடுகிறார். பின் கோபிக்கு பெட்டில் படுக்க இடமில்லை. அவர் வேறு வழி இல்லாமல் தரையில்படுத்து தூங்குகிறார்.
மறுநாள் செழியன் ஜாக்கிங் சென்றுவிட்டு வர அப்போது ஈஸ்வரி உன் அப்பாவை பார்த்தியா என கேட்கிறார். உடனே ராமமூர்த்தி ஏன் உன் மகனை பார்க்க வேண்டும் என்பது போல இருக்கிறதா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை அவன் எப்போதும் போவான் அதனால் தான் கேட்டேன் என சொல்கிறார். பின் ஜெனி செழியனுக்கு டீ போட்டு கொடுக்க செல்கிறார். பின் செழியன் எழிலை ஜாக்கிங் போக சொல்ல, எழில் கிளம்பி செல்கிறார். அப்போது கோபி எழிலை பார்த்து தினமும் என்னை போல ஜாக்கிங் வர வேண்டும் அப்போது தான் இளமையாக இருக்க முடியும், நானும் நீயும் சென்றால் என்னை உன் தம்பி என சொல்வார்கள் என கோபி சொல்கிறார்.
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நவ.01ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
பின் கோபி எனக்கு போட்டியாக ஓடு என சொல்ல, எழில் வேகமாக ஓடுகிறார். அவருடைய வேகத்திற்கு கோபியால் ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறது. உடனே எழில் கோபியை நக்கல் அடிக்கிறார். பின் கோபியால் நடக்க கூட முடியாமல் வீட்டிற்கு வருகிறார். அசதியாக அமர பாக்கியா ஒரு காபி என கேட்கிறார். பின் ராதிகா இருப்பதை உணர்ந்து நல்லவேளை சத்தமாககேட்கவில்லை என நினைக்கிறார். ராதிகா பேப்பர் படித்து கொண்டிருக்க, ராதிகாவை கோபி குறு குறு என பார்க்கிறார். ராதிகா என்ன வேண்டும் என கேட்க ஒரு காபி கிடைக்குமா என கோபி கேட்கிறார். உடனே ராதிகா முறைத்து பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்