கோபியை வெட்ட போகும் எழில், கெஞ்சி சமாதானம் செய்யும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை வெட்ட போகும் எழில், கெஞ்சி சமாதானம் செய்யும் பாக்கியா - இன்றைய
கோபியை வெட்ட போகும் எழில், கெஞ்சி சமாதானம் செய்யும் பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை வெட்ட போகும் எழில், கெஞ்சி சமாதானம் செய்யும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் எதிர் வீட்டிற்கு கோபி குடி வந்ததை தெரிந்து அவரை வெட்ட செல்கிறார். ஆனால் பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என சொல்லி கெஞ்சுகிறார். மறுபக்கம் ஈஸ்வரி கோபியை ராதிகா உடன் பார்த்து கோவப்படுகிறார். ராமமூர்த்தி நீ கஷ்டப்படுவதை நாங்க பார்க்க போகிறோம் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் அப்பா எதிர் வீட்டிற்கு குடி வந்துள்ளதாக சொல்லி அழ உடனே கோவப்பட்ட எழில், கத்தியை எடுத்துக் கொண்டு கோபியை வெட்ட செல்கிறார். ஆனால் ராமமூர்த்தி எழிலை தடுத்து, நீ வளர வேண்டிய பையன் அவனை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போக போறியா என கேட்கிறார். நான் அவனை வெட்டுகிறேன் கத்தியை என்னிடம் கொடு என தாத்தா சொல்ல, ஆனால் எழில் என்னை விடுங்க நான் அவரை சும்மா விடமாட்டேன் என சொல்கிறார். உடனே பாக்கியா எழிலை அடித்து சும்மா இரு என சொல்கிறார். செழியன் எப்படி அழுகிறான் பாரு என பாக்கியாவிடம் எழில் சொல்ல, யார் எப்படி போனால் நமக்கு என்ன என பாக்கியா சொல்கிறார்.

அவர் இங்கே வந்தால் சென்று கொலை செய்துவிடுவியா, நீங்க 2 பேரும் ஏன் இப்படி இருக்கீங்க, உங்களுக்காக தான் நான் இருக்கேன். நீங்க இருக்கும் தைரியத்தில் தான் நான் கல்லு மாதிரி இருக்கேன் என பாக்கியா எழிலிடம் கெஞ்சி கேட்கிறார். செழியனை வருத்தப்படாதே என சொல்கிறார். பின் இனியா ஸ்கூலிற்கு கிளம்ப பாக்கியாவும் ஈஸ்வரியும் வழி அனுப்ப வருகின்றனர். அப்போது ஈஸ்வரி கோபி காரை பார்த்துவிட்டு இங்கே தான் இருக்கானா என கேட்கிறார். பின் எழில் நமக்கு என்ன என கேட்க, கோபி வெளியே வந்து மயூராவை கூப்பிடுகிறார். பின் ராதிகா சாப்பாடு கொண்டு வர ஈஸ்வரி இனியா அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

பின் ஈஸ்வரி வீட்டிற்குள் வந்து ராமமூர்த்தியிடம் அவன் எப்படி இதை எல்லாம் செய்யலாம். நீங்க அவனிடம் கேட்க வேண்டும் என சொல்கிறார். இனியாவிற்கு மனசு எப்படி கஷ்டப்படும் அதை பற்றி அவன் நினைக்கவே மாட்டேங்கிறான் என ஈஸ்வரி சொல்கிறார். பின் பாக்கியா நீங்க கவலைப்படாதீங்க என சொல்கிறார். ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் சென்று பேச சொல்ல சொல்கிறார். உடனே இந்த வீட்டை அவன் காலி செய்ய வேண்டும் என ஈஸ்வரி சொல்கிறார். அவன் தான் நம்ம குடும்பத்தை பார்த்து ஏங்குவான். அதெல்லாம் சீக்கரம் தெரியும் அவனுக்கு என ராமமூர்த்தி சொல்கிறார்.

மறுபக்கம் பாக்கியா சமையல் செய்ததற்கு ராஜசேகர் பணம் கொடுக்க வர சொல்கிறார். அப்போது நடந்தது எல்லாம் மேனேஜர் சொன்னார். அது உங்க கணவரின் கல்யாணமாம், ஆனாலும் எப்படி சரியாக சமைத்தீர்கள் என கேட்கிறார். என்ன நடந்தாலும் லட்சியம் தான் முக்கியம் என நீங்க இருப்பது ரொம்ப பெரிய விஷயம் என சொல்லி பணம் கொடுத்துவிட்டு, இனி நீங்க தான் என் மண்டபத்தில் சமையல் ஆர்டர் எடுக்க வேண்டும் என சொல்கிறார். பின் கோபி காரில் வந்து கொண்டிருக்க, ராமமூர்த்தி ரோடில் நடந்து வருகிறார். அப்போது ராமமூர்த்தி கல்லை விட்டு அடிக்க கோபி ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க என கேட்கிறார். நான் அப்படி தான் செய்வேன் என ராமமூர்த்தி சொல்ல, காருக்கு எதாவது ஆனால் என்னசெய்வது என கோபி கேட்கிறார்.

பான் – ஆதார் பயனர்கள் கவனத்திற்கு – அதிகரிக்கும் மோசடிகள் – இதனை செய்யாதீர்கள்! எச்சரிக்கை!

இது உன் அப்பா வீட்டு ரோடு இல்லை என ராமமூர்த்தி சொல்ல, கோபி நக்கலாக சிரிக்கிறார். பின் என் அப்பா தான் நான் நன்றாக இருக்க கூடாது என ஆசைப்படுகிறார் என சொல்ல, நீ எப்படி நன்றாக இருப்பாய் என கேட்கிறார். உடனே கோபி நீங்க தான் உடம்பு சரியில்லாமல் படுத்தீங்க என சொல்கிறார். ராமமூர்த்தி அதெல்லாம் உன்னால் தான் வந்தது என சொல்ல, உங்களை போல ஒரு அப்பா இருந்ததால் தான் நான் கஷ்டப்பட்டேன். இப்போ நான் சந்தோசமாக இருக்கேன். அப்போ கடவுள் என் பக்கம் தான் இருக்கிறார் என சொல்கிறார். நீ இந்த குடும்பத்தை விட்டதை நினைத்து அழுவாய் அதை நான் பார்க்க தான் போகிறேன் என சொல்லிவிட்டு கிளம்ப, கோபி ராமமூர்த்தி மீது கோபப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!