ராமமூர்த்தியை கண்டபடி பேசும் கோபி, ஓனரிடம் ஆர்டருக்காக கெஞ்சும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
ராமமூர்த்தியை கண்டபடி பேசும் கோபி, ஓனரிடம் ஆர்டருக்காக கெஞ்சும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
ராமமூர்த்தியை கண்டபடி பேசும் கோபி, ஓனரிடம் ஆர்டருக்காக கெஞ்சும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
ராமமூர்த்தியை கண்டபடி பேசும் கோபி, ஓனரிடம் ஆர்டருக்காக கெஞ்சும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தியை கோபி அப்பா என பார்க்காமல் அவமானபடுத்தி தள்ளி விட கோவப்பட்ட பாக்கியா, கோபியை தடுத்து ராமமூர்த்தியை அழைத்து வருகிறார். பின் மண்டபம் ஓனரிடம் பாக்கியா கெஞ்சி ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டாம் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி எல்லாரையும் அழுக வைத்துவிட்டு எப்படி நீ சந்தோசமாக இருப்பாய் என கேட்டு, கோபி மாலையை பிடித்து சண்டை போட உடனே கோபி அப்பா என பார்க்காமல் அவரை தள்ளிவிடுகிறார். இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை இனி எதாவது பேசினால் அப்பா என பார்க்கமாட்டேன் என கோபி செல்ல, பாக்கியா போதும் நிறுத்துங்கள் என சொல்கிறார். பின் கோபி ராமமூர்த்தியை பார்த்து அவ்வளவு தான் மரியாதை என சொல்ல, பாக்கியா கோபி கையை பிடித்துவிட்டு முறைத்து பார்க்கிறார்.

பின் இதெல்லாம் பார்க்காமல் ராதிகா கிளம்ப, கோபி முதலில் இங்கே இருந்து கிளம்புங்கள் என சொல்கிறார். நீ நன்றாக இருக்கமாட்டாய் என ராமமூர்த்தி சொல்ல, பாக்கியா அவரை அழைத்து கொண்டு வருகிறார். அப்போது கோபி பாக்கியாவிடம் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி எல்லாரும் வேடிக்கை பார்த்தீங்க, இன்னைக்கு என் முறை என நக்கலாக பேச , உடனே ராமமூர்த்திக்கு கோவம் வருகிறது. ஆனால் பாக்கியா பேசாதீங்க என சொல்கிறார். கோபி நாளைக்கு இந்த கல்யாணம் நடக்கும் ராதிகா கழுத்தில் தாலி கட்டுவேன் என சொல்கிறார். உடனே பாக்கியா கோபியை பார்த்து, உன் தகப்பனிற்கு நீ செய்வதை நாளை உன் பசங்க உனக்கு செய்ய கூடாது என கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என சொல்கிறார்.

தாத்தா பாக்கியாவை பார்த்து நீ இங்கே என்ன செய்கிறாய் என கேட்க, எனக்கு யாருடைய திருமணம் என எனக்கு தெரியாது என சொல்கிறார். பின் பாக்கிய நீங்க ஏன் இங்கேயே வந்தீங்க என கேட்க, உன் அத்தையிடம் இவன் கல்யாணம் செய்ய இருப்பதை சொல்லி இருக்கிறான். பின் நானும் பேசினேன் ஆனால் அவன் கேட்கவில்லை என சொல்கிறார். என்னை ஏன் தடுத்தாய் என கேட்க, பாக்கியா நாம சென்று பேசினால் அவமானம் தான் கிடைக்கும் என சொல்கிறார். நீங்க போய் பேசி பயன் இல்லை என சொல்ல, இது உன் வாழ்க்கை என ராமமூர்த்தி சொல்கிறார். நீங்க யாரிடமும் அவமானப்பட வேண்டாம் என பாக்கியா ராமமூர்த்தியிடம் கெஞ்சுகிறார்.

எங்களுக்கு நீங்க வேண்டும் மாமா, எந்த உறவையும் அன்பையும் பிடித்து வைத்திருக்க முடியாது விடுங்கள் என பாக்கியா சொல்கிறார். பின் ராதிகா கோபி சொன்னது போல சிம்பிளாக கல்யாணம் செய்திருக்கலாம் என சொல்ல, ராதிகாவின் அம்மா அந்த அம்மாவை கிளம்ப சொல் என சொல்ல, ஆனால் கோபி பாக்கியா இருந்து ராதிகா கழுத்தில் தாலி கட்டுவதை பார்க்க வேண்டும் என சொல்கிறார். பின் பாக்கியாவிடம் மேனேஜர் ஓனர் வந்திருப்பதாக கூப்பிடுகிறார். பாக்கியாவிடம் என்ன இதெல்லாம் என கேட்க மேனேஜர் இங்க மாப்பிள்ளை இந்த அம்மாவின் கணவராம், அவருக்கு இது இரண்டாவது கல்யாணமாம் என சொல்ல, மேனேஜர் என் மண்டபத்தில் இது போல எந்த பிரச்சனையும் நடக்க கூடாது என சொல்கிறார்.

ஆதார் அட்டையில் இதைச் செய்யவே கூடாது – இது தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க !!

உடனே பாக்கியா ஆர்டர் கேன்சல் செய்யாதீங்க ரொம்ப நஷ்டம் ஆகிவிடும். என்னை நம்பி நிறைய பெண்கள் இருக்காங்க என சொல்ல, மேனேஜர் நான் அப்பவே சொன்னேன் இவங்களுக்கு ஆர்டர் கொடுத்தீங்கன்னு சொல்கிறார். அப்போது பாக்கியா தயவு செய்து கேன்சல் செய்யாதீங்க என கேட்க, ஓனர் ஆனால் அடிக்கடி பிரச்சனை வந்தால் நான் என்ன செய்வது என கேட்கிறார். இப்படி ஒரு பிரச்சனை வரும் என எனக்கு தெரியாது இனிமேல் இப்படி நடக்காது என பாக்கியா கெஞ்சுகிறார். உடனே ஓனர் சரி என சொல்கிறார். பெண் வீட்டு சைடு நீங்க தான் பேச வேண்டும் என ஓனர் சொல்கிறார். பின் பாக்கியா ராமமூர்த்தியிடம் எனக்கு இந்த ஆர்டர் முக்கியம், அவங்க முன்னாடி நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் நான் இதை சரியாக நடத்த வேண்டும். அவர் என்னை எத்தனை முறை வேலையை விட சொல்லி இருக்கிறார். அப்போ எல்லாம் நான் வேலையை விட்டேன். ஆனால் இப்போ அது தவறு என சொல்கிறார். எதுக்காகவும் நான் வேலையை விடமாட்டேன் என பாக்கியா சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!