கோபியை டாடி என கூப்பிடும் மயூ.. இனியா நியாபகத்தால் கஷ்டப்படும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை டாடி என கூப்பிடும் மயூ.. இனியா நியாபகத்தால் கஷ்டப்படும் கோபி - இன்றைய
கோபியை டாடி என கூப்பிடும் மயூ.. இனியா நியாபகத்தால் கஷ்டப்படும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை டாடி என கூப்பிடும் மயூ.. இனியா நியாபகத்தால் கஷ்டப்படும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா கோபியை டாடி என கூப்பிடவா என கேட்க, கோபிக்கு இனியா பற்றிய நினைப்பு வருகிறது. உடனே அவர் ராதிகாவிடம் இனியாவை கூட வைத்துக் கொள்ள வேண்டும் என வருத்தப்பட்டு பேசுகிறார். மறுபக்கம் மயூரா ஸ்கூலில் பேரெண்ட்ஸ் மீட்டிங்கிற்கு கோபியும் உடன் செல்கிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா கோபியிடம் நீங்க என் அம்மாவை கல்யாணம் செய்து கொண்டீர்களா என கேட்கிறார். அதை கேட்டு ராதிகாவும் கோபியும் அதிர்ச்சி அடைகின்றனர், உன் முன்னாள் தான் நான் உன் அம்மா கழுத்தில் தாலி கட்டினேன் என கோபி கேட்க, ஆமாம் அப்போ நான் ஏன் உங்களை அங்கிள் என கூப்பிடுகிறேன். நான் டாடி என கூப்பிடவா என மயூரா கேட்க, ராதிகாவும் கோபியும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் கோபி மிகவும் வருத்தப்பட்டு கண்டிப்பாக கூப்பிடு என சொல்ல, மயூரா டாடி என கூப்பிடுகிறார். அதை பார்த்து ராதிகாவும் கோபியும் வருத்தப்படுகின்றனர். அப்போது கோபிக்கு இனியா டாடி டாடி என பாசமாக பேசுவது நியாபகத்திற்கு வருகிறது.

டாடி எங்கே இருக்கீங்க என இனியா பேசியது நியாபகத்திற்கு வருகிறது. கோபி அதை நினைத்து தூங்காமல் வருத்தப்படுகிறார். அப்போது ராதிகா எழுந்து என்ன ஆச்சு என கேட்க, மயூரா என்னை டாடி என கூப்பிடலாமா என கேட்டதும் நெஞ்சு எல்லாம் வலிக்கிறது. மயூ என்னை டாடி என கூப்பிட்டதும் எனக்கு இனியா நியாபகம் வந்துவிட்டது என சொல்லி வருத்தப்படுகிறார். இனியா மட்டும் என்னிடம் வந்துவிட்டால் நான் சந்தோசமாக இருப்பேன் என கோபி சொல்கிறார். அம்மா அப்பா தான் என் மீது கோவமாக இருக்காங்க, இனியா நடந்த சம்பவத்தால் என் மீது கோவமாக இருக்கிறாள். ஆனால் ஒரு நாள் என்னை புரிந்து கொண்டு வந்தால் நீ பார்த்துக் கொள்வாய் தான என கேட்க ஆமாம் என ராதிகா சொல்கிறார்.

மறுநாள் ராதிகா மயூரா ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருப்பதாக சொல்ல, கோபி சாரி மறந்துட்டேன் என சொல்கிறார். அப்போது கோபி நான் வரவில்லை என சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா ஸ்கூலில் எப்படி பேச வேண்டும் என கண்ணாடியை பார்த்து பேசி பார்க்கிறார். இனியா அதை பார்த்து வருத்தப்படுகிறார். பின் ஈஸ்வரி செல்வி தாத்தாவிடம் சொல்லிவிட்டு பாக்கியா கிளம்புகிறார். ஆனால் கோபி ராதிகாவிடம் நான் வரவில்லை என சொல்ல ராதிகா என்ன பிரச்சனை என கேட்கிறார். இத்தனை வருஷம் நான் அங்கே இனியாவின் அப்பா என வந்தேன் ஆனால் இப்போது மயூராவின் அப்பா என சொல்லி கொண்டு வந்தால் நன்றாக இருக்காது என கோபி சொல்கிறார்.

காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர் … தொடங்கும் அவசர கால நடவடிக்கை!

மயூராவின் பேரெண்ட்ஸ் மீட்டிங்கிற்கு நான் மட்டும் தான் இதுவரை சென்று இருக்கிறேன். இதுவரை அம்மா அப்பாவும் சேர்ந்து வந்ததே இல்லை என காலையில் மயூரா வருத்தப்பட்டதாக ராதிகா சொல்கிறார். பின் ராதிகா வருத்தப்பட்டு பேச கோபி வர சம்மதிக்கிறார். பின் பாக்கியாவுடன் இனியா வண்டியில் கிளம்ப, கோபி அதை பார்த்து எப்படி வண்டி ஓடுகிறாள் என திட்டுகிறார். உடனே ராதிகா கோபியை முறைத்து பார்க்கிறார். மறுபக்கம் ஸ்கூலில், இனியா தோழியின் பெற்றோர்கள் இனியா அப்பா வரவில்லையா என கேட்கின்றனர். இல்லை என பாக்கியா சொல்ல, அப்போது கோபி மயூராவுடன் வருகிறார். அதை பார்த்து அவர்கள் கேள்வி கேட்க, இனியாவிற்கு பயங்கரமாக கோவம் வருகிறது. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!