ஸ்கூலில் இருந்து இனியாவை அழைத்து வந்த கோபி.. இனியாவை பார்க்க ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
ஸ்கூலில் இருந்து இனியாவை அழைத்து வந்த கோபி.. இனியாவை பார்க்க ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா - இன்றைய எபிசோட்!
ஸ்கூலில் இருந்து இனியாவை அழைத்து வந்த கோபி.. இனியாவை பார்க்க ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா - இன்றைய எபிசோட்!
ஸ்கூலில் இருந்து இனியாவை அழைத்து வந்த கோபி.. இனியாவை பார்க்க ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா சென்ற பஸ் விபத்தில் சிக்கியதாக நிகிலாவின் அம்மா போன் செய்ய உடனே பாக்கியா எழிலுடன் ஸ்கூலிற்கு கிளம்பி செல்கிறார். அப்போது கோபி வந்து இனியாவை பாக்கியாவிற்கு தெரியாமல் அழைத்து செல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், நிகிலாவின் அம்மா பாக்கியாவிற்கு போன் செய்து இனியா டூர் சென்று இருக்கிறாளா என கேள்வி கேட்கிறார். அப்போது பாக்கியா ஆமாம் என சொல்ல, உடனே நிகிலா அம்மா அவங்க சென்ற பஸ் விபத்தில் சிக்கிவிட்டதாக சொல்கிறார். பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைய, யாருக்கும் ஒன்றும் இல்லையாம் ஸ்கூலில் எல்லாரும் பத்திரமாக இருப்பதாக நிகிலாவின் அம்மா சொல்கிறார். பின் பாக்கியா பதட்டமாக இருப்பதை பார்த்து எழில் என்ன ஆச்சு என கேட்கிறார். அப்போது பாக்கியா இனியா பஸ் விபத்து ஏற்பட்டதாக சொல்ல, உடனே அனைவரும் பதட்டம் அடைகின்றனர். பின் பாக்கியாவும் எழிலும் இனியா ஸ்கூலிற்கு கிளம்பி செல்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அங்கே ஏற்கனவே கோபி வந்துவிட இனியா எங்கே என டீச்சரிடம் சொல்கிறார். உடனே டீச்சர் எதுவும் பிரச்சனை இல்லை, சின்ன மெடிக்கல் செக்கப்பில் தான் இருப்பதாக சொல்கிறார். கோபி இனியாவை இப்போதே பார்க்க வேண்டும் என சொல்ல, அப்போது எழில் மற்றும் பாக்கியா வருகின்றனர். கோபி அவர்களை பார்த்துவிட, இனியாவை பேசி அழைத்து செல்ல போகிறார்கள், அதற்கு நான் விடமாட்டேன் என கோபி நினைக்கிறார். பின் இனியாவை தேட அவள் ஒரு ரூமில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். கோபி இனியாவை ஜன்னல் வழியாக கூப்பிட இனியா கோபியை பார்த்து டாடி என ஓடி வருகிறாள்.

ஆனால் டீச்சர் செக்கப் முடிஞ்சு அனுப்பி வைக்கிறோம் என சொல்கிறார். பின் இனியாவைபரிசோதனை செய்து முடிக்க, கோபி அவளை கையேடு அழைத்து செல்கிறார். அந்த பக்கம் பாக்கியா இருப்பதை பார்த்துவிட்டு இனியாவை வேறு பக்கமாக அழைத்து செல்கிறார். பின் பாக்கியா கோபி போல இருப்பதாக சொல்ல, உடனே அங்கே இருந்த டீச்சரிடம் இனியா எங்கே என கேட்கிறார். இனியாவை அவங்க அப்பா அழைத்து சென்றுவிட்டதாக சொல்ல, பாக்கியா கோபி கார் பின்னால் சென்று இனியாவை பார்க்க வேண்டும் என அழுகிறார். ஆனால் கோபி வேகமாக காரில் சென்றுவிடுகிறார்.

தமிழக அரசு ஊழியர்கள் முதல்வருக்கு கடிதம் – அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை!

பின் இனியாவை பார்க்க வேண்டும் என எழிலிடம் அழ, வண்டியில் வரும் வழியில் எல்லாம் இனியாவை பற்றி நினைக்கிறார். பின் எழில் பாக்கியாவிற்கு தண்ணீர் வாங்கி கொடுத்து சமாதானம் செய்ய, வீட்டிற்கு வந்த பாக்கியா, நான் எப்படியாவது இனியாவை பார்க்க வேண்டும் என சொல்கிறார். திடீரென விபத்து என சொன்னதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் பெற்ற மகளை பார்க்க இப்படி ஒரு நிலைமை வரும் என நான் நினைக்கவே இல்லை என பாக்கியா அழுகிறார். நான் இப்பவே என் பொண்ணை பார்க்க வேண்டும் என பாக்கியா கோபி வீட்டிற்கு செல்கிறார். அப்போது எழில் தேவை இல்லாமல் பிரச்சனை செய்வார் என சொல்ல, பண்ணட்டும் என பாக்கியா, கோபி வீட்டு வாசலில் நிற்கிறார். அப்போது ராமமூர்த்தி இனியாவை கூப்பிட பாக்கியாவும் கூப்பிடுகிறார். ஆனால் கோபி இனியாவை வேண்டாம் நீ இங்கையே இரு என சொல்கிறார். ராதிகா பாக்கியா வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!