கோபியை ஸ்கூலிற்கு வர வைத்த இனியா.. விஷயம் தெரிஞ்சு அதிர்ச்சி அடையும் பாக்கியா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூலிற்கு பெற்றோரை அழைத்து செல்லாமல் இருப்பதால் டீச்சர் அவளை திட்டுகிறார். உடனே இனியா கோபியின் உதவியை கேட்கிறார். மறுபக்கம் இனியாவின் தோழியின் அம்மா பாக்கியாவிடம் போன் செய்து விவரத்தை சொல்ல, பாக்கியா ஸ்கூலிற்கு வந்து அதிர்ச்சிஅடைகிறார் .
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவை கண்டிப்பாக பெற்றோர்கள் வர வேண்டும் என டீச்சர் சொல்ல, உடனே இனியாவின் தோழி ஏன் உன் வீட்டில் இருந்து ஆட்கள் வரவில்லை என கேட்கிறார். அப்போது இனியா நான் சொல்லவே இல்லையே என சொல்ல, ஆபிசில் போன் இருக்கிறது அதை வாங்கி கால் செய்து பார் என சொல்கிறார். பின் இனியா எங்க வீட்டில் எல்லாரும் பாவம் என சொல்ல, அதெல்லாம் அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் என இனியாவின் தோழி சொல்கிறார். பின் இனியா ஆபிசில் இருந்து போன் செய்கிறார். அப்போது அம்மாவிற்கு போன் செய்தால் திட்டுவார் என்பதால் அப்பாவிற்கு போன் செய்கிறாள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
கோபி போனை எடுக்க இனியா அழுது கொண்டே பேசுகிறாள். கோபி என்ன ஆச்சு என கேட்க, பிரச்சனையை பற்றி இனியா சொல்கிறார். பின் கோபி இனியாவிற்காக ஸ்கூலிற்கு வருகிறார். மறுபக்கம் பாக்கியா அமிர்தாவிற்கு போன் செய்கிறார். அமிர்தா போனை எடுக்க, எப்படி இருக்கீங்க என விசாரிக்கிறார். பின் அமிர்தா அழ பாக்கியா அழாதேமா எழில் யாரையும் அழ வைக்க மாட்டான். நீங்க காதலிக்கிறீர்கள் உங்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும் உன் அம்மா அப்பா வாக்குறுதியை நம்புவார்களா என எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்க கல்யாணம் கண்டிப்பாக நடக்கும் என உறுதி அளிக்கிறார்.
மறுபக்கம் கோபி ஸ்கூலிற்கு வர இனியா என் தோழி ஸ்கூலிற்கு போன் கொண்டு வந்தால் அதை பார்த்துக் கொண்டு இருந்தேன் அதனால் டீச்சர் வர சொன்னார்கள். டீசி கொடுத்துவிடுவதாக மிரட்டுவதாக சொல்கிறார். உடனே கோபி உள்ளே சென்று டீச்சரிடம் பேசுகிறார். கோபி அவள் போன் கொண்டு வரவில்லை என சொல்ல, ஆனால் டீச்சர் பயங்கர கோவமாக திட்டுகிறார். உடனே கோபி இனிமேல் இப்படி செய்யமாட்டாள் என சொல்கிறார். பின் வெளியே வந்து கோபி இனியாவிற்கு ஆறுதலாக பேசுகிறார். அதனால் இனியாவிற்கு கோபி மீது பாசம் வருகிறது.
விஜய் டிவிக்காக இதை கூட செய்வதாக கூறியுள்ள மணிமேகலை – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
பின் செல்வி பாக்கியா பேசிக் கொண்டிருக்க ஜெனி குழந்தை பற்றி கேட்கிறார். பாக்கியா ஜெனிக்கு எல்லாம் சொல்லி கொடுக்க, குழந்தை என்ன செய்தாலும் என்னிடம் நீ சொல்ல வேண்டும் என பாக்கியா சொல்கிறார். அப்போது இனியாவின் தோழி அம்மா பாக்கியாவிற்கு போன் செய்கிறார். அவர் நீங்க ஏன் ஸ்கூலிற்கு வரவில்லை என கேட்டு நடந்ததை சொல்கிறார். அப்போது பாக்கியா இனியா எதுவுமே சொல்லவில்லை என சொல்ல, பாக்கியா உடனே ஸ்கூலிற்கு கிளம்பி வருகிறார். அங்கே டீச்சரிடம் இனியா பற்றி கேட்க, டீச்சர் கோபி வந்ததை பற்றி சொல்கிறார்கள். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். உங்களுக்கு தெரியாதா என டீச்சர் கேட்க பாக்கியா யார் வந்தா என மீண்டும் கேட்கிறார். உங்க கணவர் தான் வந்தார் என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.