கோபியிடம் இனியா நடந்து கொண்டதை பற்றி சொல்லும் மயூ, அமிர்தாவிற்கு வர்ஷினி சொன்ன ஷாக் தகவல் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியிடம் இனியா நடந்து கொண்டதை பற்றி சொல்லும் மயூ, அமிர்தாவிற்கு வர்ஷினி சொன்ன ஷாக் தகவல் - இன்றைய
கோபியிடம் இனியா நடந்து கொண்டதை பற்றி சொல்லும் மயூ, அமிர்தாவிற்கு வர்ஷினி சொன்ன ஷாக் தகவல் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியிடம் இனியா நடந்து கொண்டதை பற்றி சொல்லும் மயூ, அமிர்தாவிற்கு வர்ஷினி சொன்ன ஷாக் தகவல் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூராவிடம் இனியா நடந்து கொண்டது பற்றி கோபியிடம் சொல்லி ராதிகா கோபப்படுகிறார். மறுபக்கம் ஜெனியின் குழந்தை பற்றி குடும்பத்தினர் பேசி சந்தோசப்படுகின்றனர். பின் அமிர்தா வீட்டிற்கு வர்ஷினி செல்ல, அவர் எழிலை திருமணம் செய்ய இருப்பதாக சொல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா ராதிகாவிடம் இனியா அக்காவிற்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என கேட்க உடனே ராதிகா அவர்களுக்கு நம்மை பிடிக்க வேண்டாம் என சொல்கிறார். பின் கோபியிடம் இனியா நடந்து கொண்டதை பற்றி சொல்ல, கோபி இனியா அப்படி எல்லாம் நடந்து கொள்ளமாட்டாள் என கோபி சொல்கிறார். அப்போது ராதிகா அப்போ இவள் பொய் சொல்கிறாளா என கேட்க கோபி அப்படி நான் சொல்லவே இல்லை என சொல்கிறார். பின் ராதிகா உங்களை திருமணம் செய்து உங்க குடும்பத்தினர் தான் என்னை கஷ்டப்படுத்துகிறார்கள். நான் அவர்களை ஒன்றும் செய்யவில்லை என சொல்கிறார்.

மறுபக்கம் இனியா ஜெனியின் குழந்தை என்னை எப்படி கூப்பிடும் என கேட்க, அத்தை என கூப்பிட வேண்டும் என பாக்கியா சொல்கிறார். அத்தை எல்லாம் முடியாது அக்கா என கூப்பிட சொல்லுங்கள் என சொல்ல, அதெல்லாம் குழந்தை வந்ததும் அவளிடம் கேட்போம் என பாக்கியா சொல்கிறார். பின் ஈஸ்வரி எழிலை நீயும் கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக் கொள் என சொல்கிறார். பின் வர்ஷினி வந்ததை பற்றி சொல்ல, அதை கேட்டு எழில் அதிர்ச்சி அடைகிறார்.

பின் செல்வி ஜெனியிடம் குழந்தை பற்றி பேச, ஜெனி குழந்தைக்கு நான் தான் தாலாட்டு பாடுவேன் என சொல்கிறார். அப்போது ஈஸ்வரி அப்போ நாங்க எதற்கு இங்கே இருக்கோம் என ஈஸ்வரி கேட்கிறார். பின் பாக்கியா ஈஸ்வரி ராமமூர்த்திக்கு மருந்து வாங்கி கொண்டு வர, ஈஸ்வரி எங்களுடைய மருந்து செலவிற்கு நாங்க பணம் தருவதாக சொன்னோமே என சொல்கிறார். ஆனால் பாக்கியா என்னிடம் பணம் இருக்கிறது என சொல்கிறார். பின் ஜெனி ஆண்டிக்கு புது ஆர்டர் கிடைத்துள்ளதாக சொல்ல, ஈஸ்வரி அதை கேட்டு சந்தோசப்படுகிறார். பின் பாக்கியா எனக்கு வேலை செய்ய மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார்.

பாக்கியாவின் தைரியத்தை பார்த்து ஈஸ்வரி ராமமூர்த்தியும் சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் அமிர்தா வீட்டிற்கு வர்ஷினி வருகிறார். அப்போது அமிர்தா அம்மா அப்பாவிடம் இது ப்ரொடியூசர் மகள் என அமிர்தா அறிமுகம் செய்து வைக்கிறார். பின் கணேஷ் புகைப்படத்தை பார்த்து இது தான் அமிர்தாவின் கணவரா என கேட்க, ஆமாம் இவன் போன பின் எழில் தான் எங்களுக்கு மகனாக இருப்பதாக அமிர்தாவின் அப்பா அம்மா சொல்கின்றனர். பின் வர்ஷினி நீங்க எழிலிற்கு அம்மா அப்பா என்றால் எனக்கு அத்தை மாமா என சொல்கிறார்.

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைவு – அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைய, என்ன சொல்கிறாய் நீ என அமிர்தாவின் அப்பா கேட்கிறார். ஆமாம் நான் எழிலை கல்யாணம் செய்ய போகிறேன் என சொல்ல, அமிர்தா அதை நம்பவில்லை. பின் வர்ஷினி எழில் வீட்டில் எல்லாருக்கும் என்னை பிடித்து இருக்கிறது. என் அப்பாவிடமும் அதை பற்றி நான் பேசிவிட்டேன் என வர்ஷினி சொல்ல, பின் அவர் கிளம்புகிறார். அமிர்தா எழில் அப்படிப்பட்டவர் இல்லை என சொல்ல, ஆனால் அமிர்தாவின் அப்பா அம்மா அதை நம்பவில்லை இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!