கர்ப்பமாக இருக்கும் ஜெனி.. கோபியை தாத்தா என சொல்லி நக்கலடிக்கும் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கர்ப்பமாக இருக்கும் ஜெனி.. கோபியை தாத்தா என சொல்லி நக்கலடிக்கும் ராமமூர்த்தி - இன்றைய
கர்ப்பமாக இருக்கும் ஜெனி.. கோபியை தாத்தா என சொல்லி நக்கலடிக்கும் ராமமூர்த்தி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கர்ப்பமாக இருக்கும் ஜெனி.. கோபியை தாத்தா என சொல்லி நக்கலடிக்கும் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனிக்கு காலையில் இருந்து வாந்தி வருவதாக சொல்ல, உடனே பாக்கியா மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கே ஜெனி கர்ப்பமாக இருப்பதாக சொல்ல, அதை கேட்டு குடும்பத்தினர் சந்தோசப்படுகின்றனர். கோபிக்கு ராமமூர்த்தி விஷயத்தை சொல்ல , அவர் செழியனிடம் வாழ்த்துக்களை சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி காலையில் வாந்தி எடுக்க, அந்த சத்தம் கேட்டு செழியன் வருகிறார். என்ன ஆச்சு நைட் சாப்பிட்டது எதுவும் ஒப்புக் கொள்ளவில்லையா என கேட்க, அதெல்லாம் இல்லை மூன்று நாட்களாக வாந்தி வருவது போலவே இருப்பதாக ஜெனி சொல்கிறார். உடனே செழியன் அதெல்லாம் ஒன்றும் இருக்காது என சொல்கிறார். பின் பாக்கியாவும் ஈஸ்வரியும் அடுப்படியில் இருக்க, ஜெனி வந்து காலையில் இருந்து வாந்தி வருவதாக சொல்கிறார். உடனே ஈஸ்வரி நாள் தள்ளி போயிருக்கா என கேட்க, ஜெனி ஆமாம் என சொல்கிறார். பின் பாக்கியா ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்க, ஜெனி நடந்த பிரச்சனையில் நான் மறந்துவிட்டேன் என சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி எதற்கும் மருத்துவமனை சென்று வந்த பின் முடிவு செய்யலாம் அது வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என சொல்கிறார். அப்போது செழியன் வர சாதாரண வாந்தி தான் என சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்ல, பாக்கியாவும் உடன் கிளம்புகிறார். ஈஸ்வரி நல்ல செய்தி வர வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறார். மறுபக்கம் எழில் தாத்தா ஈஸ்வரி செல்வி என அனைவரும் ஜெனி வர காத்துக் கொண்டிருக்க, ஈஸ்வரி பதட்டமாக இருக்கிறார். எழில் ஜெனிக்கு எதுவும் ஆகாது என சொல்ல, செல்வி ஆக வேண்டும் என தான் அம்மா ஆசைப்படுவதாக சொல்கிறார். எழிலிற்கு அது புரியாமல் இருக்கிறது. அப்போது பாக்கியா ஜெனி செழியன் வருகின்றனர்.

பாக்கியா ஈஸ்வரியிடம் எல்லாம் நல்ல செய்தி தான் என சொல்ல, ஈஸ்வரி ஜெனிக்கு வாழ்த்துக்களை சொல்கிறார். பின் தாத்தாவும் சந்தோஷத்தில் இருக்க, எழில் செழியனை தூக்கி சுற்றுகிறார். 2 மாசம் ஆகிவிட்டது என பாக்கியா சொல்ல, நடந்த பிரச்சனையில் இவள் கவனிக்காமல் விட்டுவிட்டால் என சொல்கிறார். பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்தால் எதாவது நல்லது நடக்க போகிறது என அர்த்தம் என செல்வி சொல்கிறார். பின் செழியன் இனிப்பு வாங்க கிளம்புகிறார். மறுபக்கம் தாத்தா ரோட்டில் அனைவருக்கும் என் பேரன் அப்பா ஆக போகிறான் என சொல்லி இனிப்பு கொடுக்கிறார். அப்போது கோபி வீட்டிற்கு சென்று இனிப்பு கொடுத்து என் பேரன் அப்பா ஆக போகிறான் என சொல்கிறார்.

மைனா நந்தினிக்கும் இந்த போட்டியாளருக்கும் இப்படி ஒரு உறவா..லீக்கான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

அதை கேட்டு கோபி சந்தோசப்பட, ஆமாம் நீ தாத்தா ஆகிவிட்டதை என சொல்கிறார். அதை கேட்டு கோபி கோவப்பட, தாத்தா தாத்தா என சொல்லி வெறுப்பேற்றுகிறார். பின் தாத்தா தாத்தா என பாடி கொண்டே செல்கிறார். கோபி எல்லாருக்கும் நல்ல அப்பா கிடைத்திருக்கிறார்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படி என ராதிகாவிடம் பேசுகிறார். பின் செழியனுக்காக கோபி காத்துக் கொண்டிருக்க, அப்போது செழியன் வேலைக்கு கிளம்பி வருகிறார். அப்போது கோபி செழியனை பார்த்து வாழ்த்துக்களை சொல்கிறார். நீ சந்தோசமாக இருக்க வேண்டும். நீ கொடுத்து வைத்தவன் என சொல்ல, செழியன் எதுவும் பேசாமல் இருக்கிறார். இப்போ தான் நீ பிறந்தது போல இருக்கிறது, ஆனால் உனக்கு ஒரு குழந்தை என நினைக்கும் போது மிகவும் சந்தோசம் என கோபி பேச, செழியன் எதுவும் பேசாமல் இருக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!