பாக்கியாவிடம் சண்டை போட்டு ரேஷன் கார்டை வாங்கும் கோபி, எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவிடம் சண்டை போட்டு ரேஷன் கார்டை வாங்கும் கோபி, எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிடம் சண்டை போட்டு ரேஷன் கார்டை வாங்கும் கோபி, எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிடம் சண்டை போட்டு ரேஷன் கார்டை வாங்கும் கோபி, எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ரேஷன் கார்டு கேட்டு வீட்டிற்கு வர ஆனால் பாக்கியா கொடுக்க முடியாது என சொல்கிறார். உடனே ராதிகா சண்டை போட கோபி வீட்டிற்குள் வந்து ரேஷன் கார்டை எடுத்து செல்கிறார். மறுபக்கம் எழில் திருமணம் பற்றி ஈஸ்வரி பேச எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி வீட்டிற்கு வந்து ரேஷன் கார்டு வேண்டும் என பிரச்சனை செய்கிறார். பாக்கியா சென்று எடுத்துக் கொண்டு வா என கோபி சொல்ல, இப்படி உரிமையோடு பேச நான் உங்க பொண்டாடி இல்லை என பாக்கியா சொல்கிறார். பின் ஈஸ்வரி முதலில் வெளியே போ என சொல்கிறார். பின் கோபி பாக்கியா நான் வேண்டாம் ஆனால் ரேஷன் கார்டு எதற்கு என கேட்க, அதெல்லாம் நாங்களே பண்ணிக்கிறோம் என ராமமூர்த்தி சொல்கிறார். கோபி செழியனிடம் ரேஷன் கார்டு கேட்க, ஆனால் செழியன் எனக்கு தெரியாது என சொல்கிறார். பின் ஈஸ்வரி பிரச்சனை செய்யாமல் கிளம்பு என சொல்ல, கோபி கிளம்பி செல்கிறார்.

வீட்டிற்கு கோபத்துடன் செல்ல, அங்கே ராதிகா என்ன சொல்வாள் என நினைத்து வருத்தப்படுகிறார். கோபி வேகமாக வந்து எனக்கு ஒன்றும் புரியவில்லை என சத்தம் போட, ராதிகா என்ன ஆச்சு என கேட்கிறார். அப்போது கோபி அவங்க கொடுக்கவில்லை என சொல்ல, ராதிகா இப்படி தான் வருவீங்க என எனக்கு தெரியும் என சொல்கிறார். பின் கோபி நீ ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய் என கேட்க, நான் சரியாக தான் பேசுகிறேன். நீங்க தான் கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் செய்வேன் என சொன்னீங்க என சொல்கிறார். எல்லாம் நான் ரெடி செய்கிறேன் என கோபி சொல்ல, உங்களுக்காக கல்யாணம் செய்து இருக்கிறேன். ஆனால் ஒரு ரேஷன் கார்டு வாங்க முடியவில்லை உங்களால் என சொல்ல, கோபி தாலியை பார்த்து இது உன் கழுத்தில் வந்ததும் ஆளே மாறிவிட்டாய் என கேட்கிறார்.

பின் கோபி கோவமாக சென்று ரேஷன் கார்டு வாங்க போகிறார். வீட்டிற்குள் நேராக செல்ல, ஈஸ்வரி உனக்கு வெட்கமாக இல்லையா என கேட்கிறார். எனக்கு வெட்கம் இல்லை என சொல்ல, எல்லா பொருளையும் எடுத்து பார்க்கிறார். பாக்கியா தேவை இல்லாத வேலை பார்க்காதீங்க என சொல்ல, நான் சென்றதை எல்லாரும் பிரியாணி சமைத்து சாப்பிட்டு என்ஜாய் செய்கிறீர்கள் என சொல்ல, செழியன் ஜெனியிடம் ரேஷன் கார்டு எங்கே என கேட்கிறார். ஜெனி சொன்னதும் கோபி அதை எடுத்துவிடுகிறார். குடும்பத்தலைவன் என என் புகைப்படம் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு நான் தேவை இல்லை என கேட்கிறார். பின் ராதிகாவிடம் ரேஷன் கார்டு கொடுக்க, ஆனால் ராதிகா கோவப்படாமல் பொறுமையாக பேசுகிறார்.

போலி ஆவணங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு ஆப்பு வைத்த நிறுவனம் – இது தேவையா? இப்போ அனுபவிங்க!

பின் எழில் வர ஈஸ்வரி வர்ஷினி பற்றி பேசுகிறார். அந்த பெண் வந்ததாக சொல்ல, எழில் எனக்கு தெரியாது என சொல்கிறார். உடனே ராமமூர்த்தி நல்ல பெண் என சொல்ல, ஈஸ்வரி அது ரொம்ப வசதியான பெண் போல என சொல்கிறார். ஆமாம் என எழில் சொல்ல, ஆனால் கொஞ்சம் கூட பந்தாவே இல்லை என ஈஸ்வரி சொல்கிறார். அந்த பெண் ஒரே பெண்ணா கல்யாணம் ஆகவில்லையே என கேட்க, எழில் இல்லை என சொல்கிறார். எனக்கு அந்த பெண்ணை எழிலிற்கு கல்யாணம் செய்ய வேண்டும் என சொல்ல, எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். நீ யாரையும் மனதில் வைத்து கொண்டிருக்கிறாயா என ஈஸ்வரி கேட்க, ஆனால் பாக்கியா சொல்லாதே என சொல்கிறார். எழில் எதுவும் பேசாமல் இருக்க, ஈஸ்வரி உன் கல்யாணத்தை நன்றாக நடத்த வேண்டும் என சொல்கிறார். ஈஸ்வரி பேசியதை கேட்டு எழில் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!