
இனியாவிற்கு கிடைத்த புது நட்பு, கேட்டரிங் ஆர்டரை வேகமாக முடிக்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவை படிக்க சொல்லி ராதிகா திட்ட, கோபி அதற்கு ஆதரவாக இருக்கிறார். மறுபக்கம் பாக்கியா உடன் சேர்ந்து அமிர்தா கேட்டரிங் ஆர்டர் முடிக்க உழைக்கிறார். பின் இனியா தன்னுடைய குடும்ப கதையை பற்றி சரணிடம் சொல்கிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா படிக்காமல் சாட் செய்து கொண்டிருப்பதை பார்த்து ராதிகா சத்தம் போடுகிறார். பின் இனியாவை படிக்க சொல்ல, இதெல்லாம் சொல்ல நீங்க யார் என இனியா கேட்கிறார். நான் தான் சொல்வேன், இதெல்லாம் உன் அப்பா சொல்ல வேண்டியது அவர் சொல்லாததால் நான் சொல்வேன் என ராதிகா சொல்கிறார். பின் கோபி ராதிகா சொல்வது சரி தான் என இனியாவிடம் சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா செல்வி அமிர்தா சேர்ந்து கேட்டரிங் ஆர்டரை முடிக்கிறார்கள். இரவெல்லாம் மண்டபத்தில் தூங்கி அவர்கள் கேட்டரிங் ஆர்டரை செய்ய நிலாவை எழில் கூட்டிக் கொண்டு வந்து காட்டுகிறார்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் – முக்கிய செயல்முறைகள் வெளியீடு!
மறுபக்கம் இனியா டியூசன் செல்ல அங்கே சரண் வருகிறார். இனியா எப்படி என் நம்பர் கிடைத்தது என கேட்க, டியூசன் குரூப்பில் எடுத்தேன் என சொல்கிறார். பின் ஏன் பாதியிலேயே மெசேஜ் செய்யவில்லை என கேட்க, இனியா தன்னுடைய குடும்ப கதையை பற்றி சொல்கிறார். பின் பாக்கியா கஷ்டப்பட்டு வேலை செய்ய, அவரால் முடியாமல் அசந்து தூங்கிவிடுகிறார். அப்போது அமிர்தா வேலை செய்ய பாக்கியா அவரை வேலை செய்யவிடாமல் செய்கிறார். பின் வேலை எல்லாம் முடிந்துவிட, மேனேஜர் வந்து வேலை இருப்பதாக சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் எழில் நிலாவுடன் விளையாடி கொண்டிருக்க, அப்போது ஈஸ்வரி செழியன் வருகிறார்கள். பின் எழில் நிலாவை விட்டுவிட்டு செல்ல, நிலா ஈஸ்வரியை பாட்டி என சொல்கிறார். உடனே ஈஸ்வரி இது யார் என எனக்கு தெரியாது என சொல்கிறார். இந்த முறை எல்லாம் எனக்கு தேவை இல்லை என சொல்ல, எழில் அதை பார்த்துவிட்டு நிலாவை அழைத்து செல்கிறார். ஜெனி குழந்தையிடம் வெறுப்பை காட்டுவதாக செழியனை திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.