“பாக்கியலட்சுமி” சீரியலில் இந்த வார கதைக்களம் – இனியாவின் காதல்! கோபி சவாலை நிறைவேற்றும் பாக்கியா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், தற்போது இனியாவின் காதல் டிராக் வர இருக்கிறது. இந்நிலையில் சீரியலில் புது என்ட்ரியாக பிரபல நடிகர் களமிறங்கி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த வார பாக்கியலட்சுமி சீரியலில் வர போகும் கதைக்களம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா டியூசனில் சரண் என்பருடன் நட்பாக பழகுகிறார். சரண் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவரால் கதையில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. இனியா அவர் மீது காதலில் விழ அதனால் பாக்கியா வருத்தப்பட போகிறார். இந்நிலையில் இந்த வார கதையில் பாக்கியாவிடம் கோபி 20 லட்சம் கொடுக்க வேண்டும் என சவால் விடுகிறார். பாக்கியாவும் கோபியின் சவாலை ஏற்றுக் கொள்கிறார்.
சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் செம்பருத்தி ஷபானா – டைட்டில் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
சவாலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என நினைத்து பாக்கியா தொடர்ச்சியாக சமையல் ஆர்டர் எடுத்து பார்க்கிறார். அதனால் அவருக்கு 2 லட்சம் கிடைக்கிறது. அந்த பணத்தை அவர் கோபியிடம் கொடுத்துவிட்டு, 20 லட்சத்தில் 2 லட்சம் கொடுத்து விட்டதாக சொல்கிறார். இனி 18 லட்சம் கொடுக்க வேண்டும் என சொல்ல, கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இதெல்லாம் இந்த வார எபிசோடில் வர இருக்கிறது.