வில்லியாக அவதாரம் எடுக்கும் ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பம் – எதிர்ப்பாராத ட்விஸ்ட்!

0
வில்லியாக அவதாரம் எடுக்கும் ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பம் - எதிர்ப்பாராத ட்விஸ்ட்!
வில்லியாக அவதாரம் எடுக்கும் ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பம் - எதிர்ப்பாராத ட்விஸ்ட்!
வில்லியாக அவதாரம் எடுக்கும் ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பம் – எதிர்ப்பாராத ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், முக்கிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் ரசிகர் இந்த சீரியலுக்கு அளித்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் புதிய ப்ரோமோ சீரியல் குறித்த எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்யுள்ளது.

புது ட்விஸ்ட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்ற எல்லா சீரியல்களின் டி.ஆர்.பி யையும் பாக்கியலட்சுமி சீரியல் ஓரங்கட்டியுள்ளது. கோபி செய்த வேலைகள் அனைத்தும் குடும்பத்திற்கு தெரிய வந்ததை தொடர்ந்து தினம் தினம் சீரியலில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் தான் வருகிறது. பாக்கியா – கோபி டைவர்ஸ், கோபியை பாக்கியா வீட்டை விட்டு துரத்தியது என ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறுவதால் ரசிகர்கள் ஆர்வம் குறையாமல் சீரியலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கோபி நடுத்தெருவுக்கு வந்துவிட்டார். இருப்பினும் தன் தவறை உணராமல் எல்லாத்துக்கும் காரணம் பாக்கியா தான், என புலம்புகிறார் கோபி. அதாவது பாக்கியா கோர்ட்டுக்கு சென்று விவாகரத்து தந்ததை கோபியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதனால் கோபி பாக்கியா மீது கடும் கோபத்தில் உள்ளார். பாக்கியாவும், இன்னும் ஒரு வருடத்தில் 40 லட்சம் ரூபாய் தருவதாக கோபியிடம் சவால் விட்டுள்ளார். இதை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்த கோபி, ராதிகாவை தேடி சென்று அங்கு நடிப்பை தொடங்குகிறார். அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு பாக்கியா தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக அடுத்த கதையை தொடர்கிறார். அப்போது ராதிகா கோபியை வெளியே போக சொல்லிவிட்டார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வார ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆக.23) மின்தடைக்கான பகுதிகள் – முழு விவரம் இதோ!

அந்த ப்ரோமோவில், கோபியின் அம்மா ஈஸ்வரி, கோபி வீட்டை விட்டு வெளியே சென்றதற்காக பாக்யாவை திட்டுகிறார். பின்னர் ராதிகா வீட்டுக்கு செல்லும் கோபியின் அம்மா, கோபி எங்கே என வீடு முழுக்க தேடுகிறார். அதற்கு ராதிகாவின் அம்மா, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என கத்துகிறார். இருப்பினும் ஈஸ்வரி அதை கண்டுகொள்ளாமல் கோபியைத் தேடினார். அதை கண்டு பொறுமையிழந்த ராதிகா, நாங்க யாரும் கோபியை ஒழித்து வைக்கல என கூறுகிறார். அப்போது, என் குடும்பத்த கெடுத்துட்டு, உங்க பொண்ண வாழ வெச்சிடலாம்னு நினைக்காதீங்க, நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என ஈஸ்வரி சாபமிடுகிறார். அதைக்கேட்டு கோபமான ராதிகா, போதும் நிறுத்துங்க, இதுக்கு மேல நீங்க பேசுற எதையும் கேட்க முடியாது, வெளிய போங்க என கத்துகிறார். ராதிகா இவ்வாறு சொன்னதும் கோபமாக வெளியேறுகிறார் ஈஸ்வரி. இதையடுத்து ராதிகா, கோபியை ஏற்றுக் கொண்டு கோபியின் குடும்பத்தை பலி வாங்குவாரா? என்ற கேள்விகளுக்கு வரும் வாரங்களில் பதில் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here