
கோபியிடம் பணத்தை கொடுத்து வீட்டை விட்டு வெளியேற வைத்த பாக்கியா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து பார்வையாளர்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்பட்டு வரும் கதைக்களத்தை கொண்ட பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் நடந்த நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இப்பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் படு வேகத்தில் செல்லும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது அடுத்த அடுத்த ட்விஸ்டை கொண்டு நகர்ந்து வருகிறது. அவ்விதமாக இன்றைய எபிசோடில் கோபி 40 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வை நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறேன் என சொல்லி குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியாக்குகிறார். இதனால் பாக்கியாவும் தனக்கான மதிப்பை விட்டு கொடுக்காத விதமாக பணத்தை தருகிறேன் என கூறுகிறார். இவ்வாறு குடும்பமே எதிர்பாராத பதிலை பாக்கியா சொன்னவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைய, கோபியும் பாக்கியாவை பார்த்து உனக்கு நாப்பதாயிரத்துக்கு எவ்ளோ சைபர்னு முதல்ல தெரியுமா? என கிண்டல் செய்கிறார்.
உடனே பாக்கியா சிறு புன்னகையுடன் எனக்கு உங்களை மாதிரி நக்கலா பேச தெரியாது. ஆனால் என்னால் உங்களுக்கு பணம் தர முடியும் என்கிறார். உடனே கோபியின் அப்பா, பாக்கியாவை கூப்பிட்டு எப்படிம்மா என கேட்கிறார். எப்படி எல்லாம் எனக்கு தெரியாது மாமா. ஆனா கண்டிப்பா நான் பணத்தை கொடுப்பேன் என்கிறார். உடனே கோபி பாக்கியாவை பார்த்து ரொம்ப நல்லா ட்ராமா பண்ற. என்னை வீட்டை விட்டு அனுப்புறத்துக்காக என்னலாம் பண்ண முடியுமோ பன்னுறல. சரி எப்ப பணத்தை கொடுப்ப? என கேட்கிறார். அதற்கு பாக்கியா ஒரு வருஷத்துல கொடுப்பேன் என சவால் விடுகிறார்.
கோபியும் இனிமே தான் மாதந்தோறும் இஎம்ஐ கட்றதுல இருக்க கஷ்டமும், பணத்தோட அருமையும் தெரியும் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவர் பின்னாடியே சென்று ஈஸ்வரி, செழியன், இனியா மூவரும் வீட்டை விட்டு போக வேண்டாம். எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் என கெஞ்சுகின்றனர். ஆனால் கோபி எதையும் கேட்காமல் கிளம்பி விடுகிறார். அதன் பிறகு வீட்டுக்குள் வந்த செழியன் பாக்கியாவை அம்மான்னு கூட பார்க்காம கன்னாபின்னாவென்று திட்ட, இதுக்கு மேல இதைப் பற்றி பேசக்கூடாது என சொல்லி பேச்சை நிறுத்துகிறார் பாக்கியாவின் மாமனார். செழியனும் எக்கேடோ கெட்டு போங்க என சொல்லிவிட்டு மாடிக்கு போகிறான்.
தமிழகத்தில் PSTM சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
ஈஸ்வரியும் பாக்கியாவை பார்த்து என் மகன் கோபி இந்த வீட்டுக்கு வர்ற வரை உன்கிட்ட பேச மாட்டேன் என கூறிவிடுகிறார். இந்த பக்கம் இனியாவும் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும்ன்னு உனக்கு நல்ல தெரிஞ்சும் வெளியே அனுப்பிட்டல, இப்போ உனக்கு சந்தோஷமா? உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல என கூறிவிட்டு அவரும் நகர்கிறார். இதனிடையில் நடுரோட்டில் நின்று புலம்புகிறார் கோபி. அப்போது அவரது பிரெண்ட் சதீஷ் வர, அவனிடம் நடந்ததை எல்லாம் கோபி கூறுகிறார். உடனே சதீஷ் ராதிகாவிடம் சொல்ல போறியா? என கேட்க இனிமே தான் ராதிகாவிடம் இது பற்றி பேச வேண்டும் என்றும் கூறுகிறார் கோபி, இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்