சமையல் போட்டியில் வெற்றி பெறும் பாக்கியா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

0
சமையல் போட்டியில் வெற்றி பெறும் பாக்கியா? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம்!
சமையல் போட்டியில் வெற்றி பெறும் பாக்கியா? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம்!
சமையல் போட்டியில் வெற்றி பெறும் பாக்கியா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி- ராதிகா திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கதையில் புதிய ட்விஸ்ட்டாக முக்கிய கதாபாத்திரம் ஒருவரின் அறிமுகம் வர இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில நாட்களாக கோபி-ராதிகா திருமண பேச்சுவார்த்தைகள் பற்றி கதை சென்று கொண்டிருக்கிறது. ஒரு வழியா ராதிகா கல்யாணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். இதனால் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கும் கோபி, புதிதாக ஒரு முயற்சியில் இறங்கி உள்ளார். அதாவது, வீட்டில் இருக்கும் அனைவரையும் தன் பக்கம் இழுப்பதற்க்காக பல வேலைகளை செய்து வருகிறார். இதையடுத்து கடந்த எபிசோடுகளில் இனியாவை ஸ்கூலிருந்து கூப்பிட பாக்கியா வழக்கம் போல் செல்கிறார். ஆனால் அங்கு அதற்கு முன்னதாகவே கோபி சென்று இனியாவை கூட்டிக்கொண்டு வருகிறார்.

இதையடுத்து பாக்கியா இனியாவை தேடி எல்லா இடமும் அலைகிறார். இந்த நிலையில் இனியா கோபியுடன் காரில் வந்து இறங்குவதை பார்க்கும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். உடனே இனியா அப்பாக்கு தான் என மேல பாசம் அதிகம் அதுனால தான் உனக்கு முன்னாடியே என்ன கூட்டிட்டு போக டைம் க்கு வந்துட்டாரு அப்படினு இனியா பாக்கியாவிடம் வழக்கம் போல் கோபமாக பேசுகிறார். இதன் பிறகு வீட்டிற்கு சென்று இனியாவை பாக்கியா கண்டிக்கிறார். பின்னர் வழக்கம் போல் வீட்டில் இருக்கும் செழியன், ஈஸ்வரி அம்மானு எல்லாரும் பாக்கியாவை திட்ட ஆரம்பிக்கின்றனர். இதனை தொடர்ந்து எழிலும், ஜெனியும் பாக்கியாவை சமாதானப்படுத்துகின்றனர்.

IT நிறுவன ஊழியர்களுக்கு WFH அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!

இந்த நிலையில் பாக்யாவுக்கு ஒரு பெரிய சமையல் ஆர்டர் கிடைக்க இன்டர்வியூ லெட்டர் வருகிறது. இந்த சமையல் போட்டியில் வெற்றி பெற்றால் தான் புதிய சமையல் ஆர்ட்டர் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடனே இதுல கலந்துக்கணும் அப்படினு பாக்கியா சொல்கிறார். பின்னர் எப்போதும் போல் எழில் பாக்கியாவிற்கு தைரியம் சொல்கிறார். இதனை அடுத்து பாக்கியா அவரது மாமனாரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். இதன் பிறகு பாக்கியா போட்டியில் வெற்றி பெற்று கோபியிடம் போட்ட சவாலில் ஜெயித்து காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிது. மேலும் பாக்கியா போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கோபியின் முடிவு என்னவாக இருக்கும்? கோபி-ராதிகா திருமணம் நடைபெறுமா? என்ற கேள்விகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here