ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து விடும் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து வருபவை!

0
ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து விடும் பாக்கியா - 'பாக்கியலட்சுமி' சீரியல் அடுத்து வருபவை!
ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து விடும் பாக்கியா - 'பாக்கியலட்சுமி' சீரியல் அடுத்து வருபவை!
ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து விடும் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து வருபவை!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தற்போது செய்வது எல்லாம் சாதாரணம் இனி வருவது தான் மெயின் படம் என்பது போல் செயல்பட்டு வருகிறார். இதனால் பாக்கியா கோபி மீது மேலும் அதிக கோவமடைகிறார். இதனால் கதை மேலும் சூடு பிடிக்க இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் கோபி எந்த தவறும் செய்யவில்லை. பாக்கியா தான் தேவையில்லாமல் கோபியை வீட்டை விட்டு அனுப்பி விட்டார் என்று பாக்கியா மேல் குறை சொல்கின்றனர். ஈஸ்வரி, செழியன், இனியா மூவரும் இதற்காக பாக்கியாவை திட்டிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், பாக்கியா எதையும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது கடமையை சரியாக செய்து வருகிறார். வழக்கம் போல், எழில் மற்றும் தாத்தா இருவரும் தான் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர்.

இந்நிலையில், இனியா ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கடைசி நாள், அப்பாவிடம் சவால் விட்டில , நீ தான் வந்து பீஸ் கட்டணும் என்று இனியா, பாக்கியாவிடம் சொல்லி விட்டு பள்ளிக்கு சென்ற பிறகு, பாக்கியா பணத்திற்கு சிரமப்பட்டு ரெடி செய்து அதை கட்டுவதற்கு ஸ்கூலிற்கு வருகிறார். ஆனால், அதற்கு முன்னதாக கோபி இனியாவை வந்து சந்திக்கிறார். இனியாவை பார்த்துவிட்டு, அங்கு மயூவை பார்க்க வந்த ராதிகாவிடம் பேசுவதற்கு செல்கிறார்.

இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!

அப்போது, பாக்கியாவும் சரியாக பள்ளிக்கு வருகிறார். கோபி, ராதிகாவிடம் நல்ல முடிவை சொல் என்று பேசி கொண்டிருக்கிறார். அதற்க்கு ராதிகாவும், எனக்கும் ஓகே தான் ஆனால், கொஞ்ச நாட்கள் எனக்கு டைம் வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு கோபி வழக்கம்போல், நீ இல்லையென்றால் செத்துவிடுவேன் ராதிகா என்று வசனம் பேசுகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த பாக்கியாவிற்கு கோவம் வந்து விடுகிறது. இவர் திருந்தவே மாட்டார் என்று நேரடியாக அவர்கள் இருவரையும் திட்டுகிறார். இதனால், கோபமடையும் ராதிகா கோபிக்கு ஆதரவு கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here