கண்ணனை திட்டிய கோபி, ஒரே மாதிரி புடவை வாங்கி கொடுத்த பாக்கியா – மகா சங்கமம் சீரியல் இன்றைய எபிசோட்!

0
கண்ணனை திட்டிய கோபி, ஒரே மாதிரி புடவை வாங்கி கொடுத்த பாக்கியா - மகா சங்கமம் சீரியல் இன்றைய எபிசோட்!
கண்ணனை திட்டிய கோபி, ஒரே மாதிரி புடவை வாங்கி கொடுத்த பாக்கியா - மகா சங்கமம் சீரியல் இன்றைய எபிசோட்!
கண்ணனை திட்டிய கோபி, ஒரே மாதிரி புடவை வாங்கி கொடுத்த பாக்கியா – மகா சங்கமம் சீரியல் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” மகா சங்கமம் சீரியலில் கோபி ராதிகா பிறந்தநாள் விழாவிற்கு வரேன் என சொன்னதை நினைத்து பதட்டமாக இருக்க அப்போது கண்ணன் வந்து கிண்டல் செய்கிறார். அதனால் கோவப்பட்ட கோபி கண்ணனை திட்டிவிடுகிறார். பின் பாக்கியா அனைவருக்கும் ஓரே மாதிரி புடவை வாங்கி கொண்டு வருகிறார்.

மகா சங்கமம்:

இன்று “மகா சங்கமம்” சீரியலில், கோபி பாக்கியாவிடம் சண்டை போட்டதை பார்த்து தனம் நீங்க சந்தோசமாக இருக்கீங்களா என கேட்கிறார். அப்போது பாக்கியா அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல செல்வி சாருக்கு பாக்கியா அக்காவை பிடிக்காது எப்போதும் இப்படி தான் இருப்பார் என சொல்கிறார். பின் பாக்கியாவை ஈஸ்வரி அழைக்க அவர் சென்றுவிடுகிறார். பின் செல்வி சார் எப்போதும் பாக்கியா அக்கா மீது கோவமாக தான் இருப்பார். ஆனால் இந்த 2 வருசமா அவருடைய நடவடிக்கை எதுவும் சரி இல்லாமல் இருக்கிறது. அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது போல எனக்கு சந்தேகம் இருக்கிறது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் தனம் பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் தாத்தா மூர்த்தியுடன் சேர்ந்து பரமபதம் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி தாத்தா சந்தோசமாக இருப்பதை பார்த்து மிகவும் சந்தோசப்படுகிறார். பின் மீனா ஜெனி முல்லை பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா ஜெனியிடம் குழந்தை வேண்டாம் என இருக்கீங்களா என கேட்கிறார். அப்படி எல்லாம் இல்லை என ஜெனி சொல்கிறார். பின் செல்வி ஜெனிக்கு ஏற்கனவே குழந்தை வந்து இல்லாமல் போனதை பற்றி சொல்கிறார். ஆனால் ஜெனி அதை நினைத்து கவலைப்படவில்லை.

இனியா எழில் என நிறைய பேர் இருப்பதாக சொல்ல, அப்போது முல்லை இவ்வளவு நாள் தெரியாமல் வருத்தப்பட்டு கொண்டிருப்பதை நினைத்து பார்க்கிறார். கண்ணன் குழந்தைகளை கொடுத்து முல்லையிடம் இவர்களை பார்த்து கூட ஏன் குழந்தை இல்லை என நினைக்கிறீர்கள் என தெரியாமல் இருக்கீங்க என கேட்கிறார். அதை எல்லாம் நினைத்து முல்லை தன்னை தானே சமாதானம் செய்து கொள்கிறார். மறுபக்கம் ராதிகா வரேன் என சொன்னதை நினைத்து கோபி பதட்டமாக இருக்கிறார். அப்போது கண்ணன் வந்து கோபியை கிண்டல் செய்கிறார்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறக்கும் நாளில் மாற்றம்!

அது கோபிக்கு கோவம் வந்து கண்ணனை திட்டிவிடுகிறார். பின் கண்ணனை திட்டுவதை ஜீவா பார்க்கிறார். கோபியிடம் சென்று அவன் சின்ன பையன் தான் நான் பேசி புரிய வைக்கிறேன் என சொல்கிறார். பின் கோபி கண்ணன் மீது தவறு எதுவும் இல்லை நான் வேற கோவத்தில் இருந்தேன் என சொல்கிறார். பின் கண்ணன் தனியாக அலங்காரம் செய்ய ஏற்பாடுகளை செய்கிறார். பின் எழில் ஜீவா கதிர் செழியன் வந்து கண்ணனிற்கு உதவி செய்கின்றனர். பின் பாக்கியா அனைவருக்கும் புடவை வாங்கி கொண்டு வருகிறார். அனைவரும் புடவையை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.

பின் மூர்த்தி கோபியிடம் தனியாக பேசுகிறார். குடும்பம் தான் முக்கியம் இரவு போன் பேசுவதை எல்லாம் நிறுத்தி விடுங்கள் என அறிவுரை சொல்கிறார். அப்போது எழில் வர கோபியிடம் அவர் சரியாக பேசாமல் இருக்கிறார். அதை எல்லாம் பார்த்து மூர்த்தி எதோ தவறாக இருப்பதாக நினைக்கிறார். பின் அனைவரும் சேர்ந்து சாப்பாடு சாப்பிடுகின்றனர். மறுநாள் தாத்தாவின் பிறந்தநாள் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here